*#சர்வ_வசிய_தன_ஆகர்ஷன_சங்கல்பம்*
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் முழுமையாக தன்னை சமுதாயத்திற்கு அர்ப்பணித்துக் கொண்ட பின் கூடுவாஞ்சேரி குன்றில் ஓலைக் குடிசையை அமைத்து, *#மெய்விளக்க_தவ_மையம்* என்ற பெயர் பலகையை வைத்தார்.
ஒரு நாள், ஒரு வயதானவர் அவ்வழியே சென்றார். குடிசைக்குள் வந்து, “தம்பி! நீ இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார்.
“தனிமனித அமைதியின் மூலம்தான் குடும்பம், சமுதாயம், உலகம் என்று படிப்படியாக விரிவடைய முடியும். தனிமனிதனின் வாழ்க்கை தேவைகள் சரியானபடி கிட்டுமானால், அவன் சார்ந்த சமுதாயப் பணி சரியாக நடைபெறும். சமுதாயம் வளமானதாக இருந்தால்தான், தனி மனிதனுக்குரிய அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகும். அதற்கான பயிற்சியை கற்றுக்கொடுக்க தயாராக இருக்கிறேன். ஆனால் கற்றுக்கொள்வதற்கு தான் யாரும் வரமாட்டேன் என்கிறார்கள்” என்று மகரிஷி பதில் அளித்தார்கள்.
ஓர் உலக ஆட்சியை ஏற்படுத்த, இது ஒரு சிறந்த திட்டமாக இருக்கிறது என்று பெரியவர் மகரிஷியை பாராட்டி விட்டு, நான் ஒரு மந்திரம் சொல்லித் தருகிறேன். அதை நீ சொல்லி வந்தாயானால், உனது நோக்கம் நிறைவேற்றத்தக்க அளவில் செயல்பாடுகள் நடைபெறும் என்று கூறி அந்த மந்திரத்தையும் எப்படி பயன்படுத்துவது என்பதையும் விவரமாக கூறிவிட்டு சென்றுவிட்டார் ஒரு வருட காலம் வரை அமைதியாக தனது கடமைகளை செய்து வந்தார். ஒருவரும் இவரிடம் பயிற்சியை கற்றுத் கொள்ள வரவில்லை
ஒரு நாள் அந்தப் பெரியவர் கூறிய கருத்துக்கள் நினைவிற்கு வந்தது.
மறுநாள் பெரியவர் சொல்லியிருந்த பிரகாரம் கீழ்க்கண்ட பொருட்களை சேகரித்தார்.
1) ஐந்து முக குத்துவிளக்கு
2) மல்லிகை மலர்
3) மஞ்சள் கலந்த அட்சதை அரிசி
4) அவல் பால் பாயாசம்
விளக்கில் ஐந்து திரிகளையும் எரியவிட்டு மந்திரத்தை 108 முறை சொல்லி முடித்தார். தினசரி இதேபோல் செய்தார்.
ஒரு சில நாட்களிலேயே அன்பர்கள் சிறிது சிறிதாக வரத்தொடங்கினார்கள். பயிற்சிகளைக் கற்றுக் கொண்டார்கள். அதன் பிறகு மகரிஷி, இது நமக்கு மட்டும்தான் பயன்படுமா? மற்றவர்களுக்கும் பயன்படுமா? என்று எண்ணி, சில அன்பர்களின் குடும்பம், தொழில், உடல்நலம், திருமணம் போன்ற பிரச்சினைகளை முன்வைத்து மந்திரத்தைச் சொன்னார். அவர்களுடைய சிக்கல்களுக்கு தீர்வு கிடைத்தது. அதுமுதற்கொண்டு வாழ்க்கைச் சிக்கலில் இருப்பவர்களுக்கு எல்லாம் சங்கல்பம் செய்தார்.
மெய் விளக்க தவ மன்றம், *#உலக_சமுதாய_சேவா_சங்கம் எனப் பெயர் மாற்றம் அடைந்தது.
*#மனவளக்கலை மன்றங்கள் பல ஊர்களிலும் தொடங்கப்பெற்றது. மன்றம் தொடங்கும் நாள் என்று அநேகமாக தனது துணைவியார் அன்னை லோகாம்பாள் உடன் சென்று அந்த மந்திரத்தை சொல்லி ஆரம்பித்து வைத்தார். அதன் பிறகு விரைவான வளர்ச்சி அடைந்தது.
தேவைப்படும் அன்பர்கள் இல்லங்களிலும், அவ்வப்போது கூட்டமாக. சேர்ந்து சங்கல்பமாக இயற்றினார்கள்.
1990ஆம் ஆண்டு வரை மகரிஷி அவர்கள் பல மன்றங்களில் அந்த மந்திரத்தை “சர்வ வசிய தன ஆகர்ஷன சங்கல்பம்” என்று கூறி நடத்திய போது, 108 எண்ணிக்கைக்காக நாணயங்களை வைத்து செய்தார்கள்.
*சர்வ வசிய தன ஆகர்ஷன சங்கல்பம்*
தேவையான பொருட்கள்
1) ஐந்து திரிகள் போடும் படியான பஞ்சமுக குத்து விளக்கு, பஞ்சு திரிகள்.
2) சுத்தமான விளக்கெண்ணெய்.
3) மஞ்சள் தூள், விளக்கெண்ணெய் ஒரு ஸ்பூன், முனை முறியாத பச்சரிசி சேர்த்து பிசைந்த அட்சதை அரிசி.
4) மல்லிகை மொட்டு அல்லது வெள்ளை மலர்கள்.
5) அவல் பால் பாயசம்.
6) ஆகர்ஷன சங்கல்பம் 108 எண்ணிக்கைக்கு நாணயம் அல்லது மலர்மலர்.
7) இரும்பு கலவாத பொருட்களை பயன்படுத்த வேண்டும்.
செய்முறை:
1) ஒரு விரிப்பின் மீது வாழை இலை அல்லது பேப்பரைப் போட்டு, அதன்மேல் குத்து விளக்கை வைத்து வாழ்க வையகம், வாழ்க வளமுடன் என்று கூறிக்கொண்டே ஐந்து திரிகளையும் பற்றவைத்தல்.
2) கூட்டு சங்கல்பம் நடத்துகிறபோது அனுபவம் உடையவர் நிகழவிருப்பதை பற்றி இந்த நிமிடம் சிற்றுரை ஆற்றல். அவரே துரிய தவம் இயற்றி நாணயம் போடுபவராகவும் செயலாற்றல்.
3) இறை வணக்கம், குரு வணக்கம் - அனைவரும் கூறல்.
4) அருட்காப்பு 3 முறை அனைவரும் கூறல்
5) துரியாதீததவம்
6) துரிய நிலையில் இருந்து யாருக்காக செய்கிறோமோ, அவருடைய பெயரை கூறி வசிய வசிய ஓம் ஸ்வாஹா என்றும், அறக்கட்டளை அல்லது தவமையம் வசமாக என்றும் இறுதியில் மூன்று முறை மகா சபையில் உள்ள எல்லோர் வசமாக என்றும் அனைவரும் சொல்ல வேண்டும். அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும் 108 முறை சொல்லும்போது எங்கள் குடும்பம் வசமாக என்று கூறிக்கொள்ளவும்.
7) ஒவ்வொரு முறை செல்லும் போதும், ஒரு நாணயம், மலர், அட்சதை அரிசியை கையில் வைத்திருந்து ஸ்வாஹா என்னும் போது விளக்கின் அருகில் போட வேண்டும். மற்றவர்கள் மலர் அட்சதை அரிசியை ஒரு பேப்பரில் போட்டு வைக்கவும்.
சரியான உச்சரிப்புடன் சொல்வதற்கு ஐந்தாறு முறை சொன்னவுடன் வாயில் உமிழ் நீர் நிரம்பி விடும். விழுங்கிய பிறகுதான் சொல்ல முடியும். காரணம் *#பிட்டியூட்டரி* *#பீனியல்* ஆகிய இரு சுரப்பிகளும் அதே நேரத்தில் இயங்கி மூளை திரவத்துடன் உமிழ்நீர் சுரந்து இனிப்பாக இருக்கும். சங்கல்பம் முடித்தவுடன் உடல், மனம் லேசாகவும் சக்தி மிகுந்தும், செல்களும், சிற்றறைகளும் புத்துணர்வுடன் இருப்பதையும் உணரலாம்.
பிரபஞ்ச சக்தியை மிகுதியாக ஆவாகனம் செய்து இருப்பதால் அன்று முழுவதும் சாப்பிடும் உணவின் அளவு குறைந்து இருக்கும்.
9) கருவமைப்பு தனது மற்றும் பிறரது முரண்பாடான, எண்ணம், சொல், செயல், கோள்கள் நிலை அல்லது சந்தர்ப்ப மோதல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றிரண்டு சரியில்லாததன் இதன் காரணமாகத்தான் காரியத் தடைகள் ஏற்பட்டு இருக்கும்.
குண்டலினி யோகிகளாக சிலர் இணைந்து தவமியற்றி சங்கல்பம் செய்ததால், அந்த இடத்தின் வான்காந்த களம் தூய்மையாகி அமைதி நிலையில் இருப்பதால், இனி அக்காரியம் தொடர்பான எண்ணங்கள் இயற்கைக்கு ஒத்த முறையில் செயல்பட்டு வெற்றியைக் கொடுக்கும். அந்தக் குடும்பத்தினருக்கு சங்கல்பத்தில் கலந்துகொண்ட அத்தனை அன்பர்களின் மனவலிமையும் கிடைத்து செயல்திறன் கூடும்.
10) சங்கல்பம் கூறி முடித்த பின்னர், ஒரு கப் நைவேத்திய பாயசத்தில் அனைத்து அறைகளும் சங்கமம் ஆகி இருப்பதை மொத்த பாயசத்தில் ஊற்றி கலக்கி அனைவருக்கும் பருகக் கொடுக்கவும்.
11) நல்ல அலைகள் நிரம்பிய மலர்களை, வீட்டிலேயே ஒரு இடத்தில் வைத்துக் கொள்ளலாம். அரிசியை கழுவி சமைத்து சாப்பிடலாம்.
12) இந்த சங்கல்பத்தை குரு, சுக்கிரன் ஆகிய ஓரைகளில் செய்வது மிகச் சிறப்பு.
13) ஒருமுறை கூட்டாக செய்த பின்னர், அந்தக் குடும்பத்தினர் தினசரி அல்லது முடிந்து நாட்களில் எல்லாம் செய்து வரலாம்.
வாழ்க வையகம் வாழ்க வையகம்
வாழ்க வளமுடன் குருவே துணை
குருவருள் செல்வன்
அருள்நிதி வினோத்குமார் வேதாத்திரி
வாழ்க வளமுடன்
www.VINborntoWin.blogspot.com
www.YouTube.com/VINborntoWin
No comments:
Post a Comment