Pages

vethathiri maharishi

vethathiri maharishi
Showing posts with label tamil. Show all posts
Showing posts with label tamil. Show all posts

தன ஆகர்ஷன சங்கல்பம்

*#சர்வ_வசிய_தன_ஆகர்ஷன_சங்கல்பம்* 

அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் முழுமையாக தன்னை சமுதாயத்திற்கு அர்ப்பணித்துக் கொண்ட பின் கூடுவாஞ்சேரி குன்றில் ஓலைக் குடிசையை அமைத்து, *#மெய்விளக்க_தவ_மையம்* என்ற பெயர் பலகையை வைத்தார்.

ஒரு நாள், ஒரு வயதானவர் அவ்வழியே சென்றார். குடிசைக்குள் வந்து, “தம்பி! நீ இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார்.

“தனிமனித அமைதியின் மூலம்தான் குடும்பம், சமுதாயம், உலகம் என்று படிப்படியாக விரிவடைய முடியும். தனிமனிதனின் வாழ்க்கை தேவைகள் சரியானபடி கிட்டுமானால், அவன் சார்ந்த சமுதாயப் பணி சரியாக நடைபெறும். சமுதாயம் வளமானதாக இருந்தால்தான், தனி மனிதனுக்குரிய அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகும். அதற்கான பயிற்சியை கற்றுக்கொடுக்க தயாராக இருக்கிறேன். ஆனால் கற்றுக்கொள்வதற்கு தான் யாரும் வரமாட்டேன் என்கிறார்கள்” என்று மகரிஷி பதில் அளித்தார்கள்.

ஓர் உலக ஆட்சியை ஏற்படுத்த, இது ஒரு சிறந்த திட்டமாக இருக்கிறது என்று பெரியவர் மகரிஷியை பாராட்டி விட்டு, நான் ஒரு மந்திரம் சொல்லித் தருகிறேன். அதை நீ சொல்லி வந்தாயானால், உனது நோக்கம் நிறைவேற்றத்தக்க அளவில் செயல்பாடுகள் நடைபெறும் என்று கூறி அந்த மந்திரத்தையும் எப்படி பயன்படுத்துவது என்பதையும் விவரமாக கூறிவிட்டு சென்றுவிட்டார் ஒரு வருட காலம் வரை அமைதியாக தனது கடமைகளை செய்து வந்தார். ஒருவரும் இவரிடம் பயிற்சியை கற்றுத் கொள்ள வரவில்லை

ஒரு நாள் அந்தப் பெரியவர் கூறிய கருத்துக்கள் நினைவிற்கு வந்தது. 
மறுநாள் பெரியவர் சொல்லியிருந்த பிரகாரம் கீழ்க்கண்ட பொருட்களை சேகரித்தார்.
1) ஐந்து முக குத்துவிளக்கு
2) மல்லிகை மலர்
3) மஞ்சள் கலந்த அட்சதை அரிசி
4) அவல் பால் பாயாசம் 
விளக்கில் ஐந்து திரிகளையும் எரியவிட்டு மந்திரத்தை 108 முறை சொல்லி முடித்தார். தினசரி இதேபோல் செய்தார்.

ஒரு சில நாட்களிலேயே அன்பர்கள் சிறிது சிறிதாக வரத்தொடங்கினார்கள். பயிற்சிகளைக் கற்றுக் கொண்டார்கள். அதன் பிறகு மகரிஷி, இது நமக்கு மட்டும்தான் பயன்படுமா? மற்றவர்களுக்கும் பயன்படுமா? என்று எண்ணி, சில அன்பர்களின் குடும்பம், தொழில், உடல்நலம், திருமணம் போன்ற பிரச்சினைகளை முன்வைத்து மந்திரத்தைச் சொன்னார். அவர்களுடைய சிக்கல்களுக்கு தீர்வு கிடைத்தது. அதுமுதற்கொண்டு வாழ்க்கைச் சிக்கலில் இருப்பவர்களுக்கு எல்லாம் சங்கல்பம் செய்தார்.

மெய் விளக்க தவ மன்றம், *#உலக_சமுதாய_சேவா_சங்கம் எனப் பெயர் மாற்றம் அடைந்தது. 
*#மனவளக்கலை மன்றங்கள் பல ஊர்களிலும் தொடங்கப்பெற்றது. மன்றம் தொடங்கும் நாள் என்று அநேகமாக தனது துணைவியார் அன்னை லோகாம்பாள் உடன் சென்று அந்த மந்திரத்தை சொல்லி ஆரம்பித்து வைத்தார். அதன் பிறகு விரைவான வளர்ச்சி அடைந்தது. 
தேவைப்படும் அன்பர்கள் இல்லங்களிலும், அவ்வப்போது கூட்டமாக. சேர்ந்து சங்கல்பமாக இயற்றினார்கள்.

1990ஆம் ஆண்டு வரை மகரிஷி அவர்கள் பல மன்றங்களில் அந்த மந்திரத்தை “சர்வ வசிய தன ஆகர்ஷன சங்கல்பம்” என்று கூறி நடத்திய போது, 108 எண்ணிக்கைக்காக நாணயங்களை வைத்து செய்தார்கள்.

*சர்வ வசிய தன ஆகர்ஷன சங்கல்பம்* 
தேவையான பொருட்கள் 
1) ஐந்து திரிகள் போடும் படியான பஞ்சமுக குத்து விளக்கு, பஞ்சு திரிகள். 
2) சுத்தமான விளக்கெண்ணெய். 
3) மஞ்சள் தூள், விளக்கெண்ணெய் ஒரு ஸ்பூன், முனை முறியாத பச்சரிசி சேர்த்து பிசைந்த அட்சதை அரிசி. 
4) மல்லிகை மொட்டு அல்லது வெள்ளை மலர்கள். 
5) அவல் பால் பாயசம். 
6) ஆகர்ஷன சங்கல்பம் 108 எண்ணிக்கைக்கு நாணயம் அல்லது மலர்மலர். 
7) இரும்பு கலவாத பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

செய்முறை: 
1) ஒரு விரிப்பின் மீது வாழை இலை அல்லது பேப்பரைப் போட்டு, அதன்மேல் குத்து விளக்கை வைத்து வாழ்க வையகம், வாழ்க வளமுடன் என்று கூறிக்கொண்டே ஐந்து திரிகளையும் பற்றவைத்தல்.

2) கூட்டு சங்கல்பம் நடத்துகிறபோது அனுபவம் உடையவர் நிகழவிருப்பதை பற்றி இந்த நிமிடம் சிற்றுரை ஆற்றல். அவரே துரிய தவம் இயற்றி நாணயம் போடுபவராகவும் செயலாற்றல்.

3) இறை வணக்கம், குரு வணக்கம் - அனைவரும் கூறல்.
4) அருட்காப்பு 3 முறை அனைவரும் கூறல் 
5) துரியாதீததவம் 
6) துரிய நிலையில் இருந்து யாருக்காக செய்கிறோமோ, அவருடைய பெயரை கூறி வசிய வசிய ஓம் ஸ்வாஹா என்றும், அறக்கட்டளை அல்லது தவமையம் வசமாக என்றும் இறுதியில் மூன்று முறை மகா சபையில் உள்ள எல்லோர் வசமாக என்றும் அனைவரும் சொல்ல வேண்டும். அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும் 108 முறை சொல்லும்போது எங்கள் குடும்பம் வசமாக என்று கூறிக்கொள்ளவும்.

7) ஒவ்வொரு முறை செல்லும் போதும், ஒரு நாணயம், மலர், அட்சதை அரிசியை கையில் வைத்திருந்து ஸ்வாஹா என்னும் போது விளக்கின் அருகில் போட வேண்டும். மற்றவர்கள் மலர் அட்சதை அரிசியை ஒரு பேப்பரில் போட்டு வைக்கவும்.

சரியான உச்சரிப்புடன் சொல்வதற்கு ஐந்தாறு முறை சொன்னவுடன் வாயில் உமிழ் நீர் நிரம்பி விடும். விழுங்கிய பிறகுதான் சொல்ல முடியும். காரணம் *#பிட்டியூட்டரி* *#பீனியல்* ஆகிய இரு சுரப்பிகளும் அதே நேரத்தில் இயங்கி மூளை திரவத்துடன் உமிழ்நீர் சுரந்து இனிப்பாக இருக்கும். சங்கல்பம் முடித்தவுடன் உடல், மனம் லேசாகவும் சக்தி மிகுந்தும், செல்களும், சிற்றறைகளும் புத்துணர்வுடன் இருப்பதையும் உணரலாம்.
பிரபஞ்ச சக்தியை மிகுதியாக ஆவாகனம் செய்து இருப்பதால் அன்று முழுவதும் சாப்பிடும் உணவின் அளவு குறைந்து இருக்கும்.

9) கருவமைப்பு தனது மற்றும் பிறரது முரண்பாடான, எண்ணம், சொல், செயல், கோள்கள் நிலை அல்லது சந்தர்ப்ப மோதல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றிரண்டு சரியில்லாததன் இதன் காரணமாகத்தான் காரியத் தடைகள் ஏற்பட்டு இருக்கும்.
குண்டலினி யோகிகளாக சிலர் இணைந்து தவமியற்றி சங்கல்பம் செய்ததால், அந்த இடத்தின் வான்காந்த களம் தூய்மையாகி அமைதி நிலையில் இருப்பதால், இனி அக்காரியம் தொடர்பான எண்ணங்கள் இயற்கைக்கு ஒத்த முறையில் செயல்பட்டு வெற்றியைக் கொடுக்கும். அந்தக் குடும்பத்தினருக்கு சங்கல்பத்தில் கலந்துகொண்ட அத்தனை அன்பர்களின் மனவலிமையும் கிடைத்து செயல்திறன் கூடும்.

10) சங்கல்பம் கூறி முடித்த பின்னர், ஒரு கப் நைவேத்திய பாயசத்தில் அனைத்து அறைகளும் சங்கமம் ஆகி இருப்பதை மொத்த பாயசத்தில் ஊற்றி கலக்கி அனைவருக்கும் பருகக் கொடுக்கவும்.

11) நல்ல அலைகள் நிரம்பிய மலர்களை, வீட்டிலேயே ஒரு இடத்தில் வைத்துக் கொள்ளலாம். அரிசியை கழுவி சமைத்து சாப்பிடலாம்.

12) இந்த சங்கல்பத்தை குரு, சுக்கிரன் ஆகிய ஓரைகளில் செய்வது மிகச் சிறப்பு.

13) ஒருமுறை கூட்டாக செய்த பின்னர், அந்தக் குடும்பத்தினர் தினசரி அல்லது முடிந்து நாட்களில் எல்லாம் செய்து வரலாம்.

வாழ்க வையகம் வாழ்க வையகம் 
வாழ்க வளமுடன் குருவே துணை 
குருவருள் செல்வன் 
அருள்நிதி வினோத்குமார் வேதாத்திரி 
வாழ்க வளமுடன் 
www.VINborntoWin.blogspot.com 
www.YouTube.com/VINborntoWin 
www.Facebook.com/VINborntoWin

குடும்ப அமைதி

உறவுகள் மேம்பட

குடும்பத்திலும், அலுவலகத்திலும், மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்க

1  நானே பெரியவன். நானே சிறந்தவன் என்ற அகந்தையை (EGO) விடவேண்டும்.
2 அர்த்தமில்லாமலும், பின்விளைவு அறியாமலும் பேசிக் கொண்டிருக்கக் கூடாது. (loose talks).
3 எந்த விஷயத்தையும், பிரச்சனையையும், நாசூக்காக கையாள வேண்டும். (Diplomacy), விட்டுக் கொடுக்க வேண்டும். (compromise)
4 சில நேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துத் தான் ஆகவேண்டும். (Tolerance)
5 நாம் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதாடக் கூடாது. (Adamant Arguement)
  குறுகிய மனப்பான்மையை விட்டொழிக்க வேண்டும்.(Narrow Mindedness)
6.உண்மை எது,பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் ,
 அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விட்டு விட வேண்டும்.(Carrying tales)
7. மற்றவர்களை விட நம்மை எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப் படக் கூடாது. (Superiority Complex)
8.அளவுக்கு அதிகமாய் ,தேவைக்கு அதிகமாய் ஆசைப் படக் கூடாது.(Over Expectation)
9.எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும், அவர்களின் சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக் கொண்டு இருக்கக் கூடாது.
10 கேள்விப் படுகின்ற எல்லா விஷயங்களையும் நம்பி விடக் கூடாது.
11  அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்தக் கூடாது.
12  நம் கருத்துகளில் உடும்பு பிடியாக இல்லாமல், மற்றவர் கருத்துக்கும் மதிபளிக்க வேண்டும்.
13  மற்றவர்களுக்கு மரியாதை காட்டவும், இதமான அன்புச் சொற்களை பேசவும்,அடக்கமும் பண்புடனும் நடந்து கொள்ள வேண்டும்.
14  பிரச்சினைகள் வரும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல்,நாமே மனம் திறந்து பேசவேண்டும்.
வாழ்க வளமுடன் வேதாத்திரி மகரிஷி www.vethathiri.edu.in

குடும்ப அமைதி


பொது:
1. குடும்ப உறுப்பினர்களிடம் உடல்நலம் மனவளம் உறுதியான நட்பு இவை நிலவினால் அமைதி நீடிக்கும்.
2. ஒவ்வொருவரும் தத்ம் கடமையை உணர்ந்து ஆற்றியும், வரவுக்குள் செலவை நிலைநிறுத்தியும் செல்வ வளத்தை
காக்கலாம்.
3. தேவை அளவு, தன்மை, காலம் ஆகியவற்றில் கருத்து முரண் ஏற்பட்டால் வெளிப்படையாகவேப் பேசி அன்போடு தீர்த்துக்
கொள்ளலாம்.
4. பிறர் குற்றத்தைப் பெரிது படுத்தாமையும் பொறுத்தலும் மறத்தலும் அமைதிக்கு வழிகளாகும்.
5. பிறர் கூறும் கடுஞ்சொற்களையும் அவை சொல்லப்படாததுபோல் பாவித்து ஒதுக்கிவிட்டால் அமைதி பிழைக்கும்.
தம்பதிகளுக்கு:
6. எவ்வகையிலும் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் தெரியாமல் வாழ்தல் நல்லதல்ல.
7. ஒருவரை ஒருவர் துல்லியமாக புரிந்துகொண்டால் எக்காரணத்தாலும் அன்புப் பிடிப்பு தளராது.
8. ஒருவருக்குத் தெரியாமல் மற்றவர் சம்பாதிப்பது செலவழிப்பது சேமிப்பது பிணக்கையே கொண்டு வரும்.
9. குடும்பத் தலைவருக்கு தன்முனைப்பு சிறிதும் வேண்டாம்.
10. நிர்வாகத்திற்கு ஏற்றது அறிவுதான் (உணர்ச்சியல்ல).
11. கூட்டாளியின் சக்திக் குறைவை சகித்துக்கொண்டால் சிக்கல் எழாது.
12. வாழ்க்கைத்துணை ஒத்துக்கொள்ளும் நாள்வரை எவ்வளவு அவசியமானாலும் எதையும் தள்ளி வைத்தலே நல்லது.
13. ஒருவர் மற்றவரின் மனப்போக்கு, உடல் தேவைகளை மதித்தால் பாலுறவு வேட்பில் நிறைவு பெறலாம்.


உணர்வாளர்களுக்கு:
14. தனக்குத் கிடைத்த வாழ்க்கைத் துணை பற்றி தம்பதிகளில் யாருக்கும் குறையிருக்கத் தேவையில்லை (காரணம் நம்
உயிராற்றலே தான் தேர்ந்தெடுத்தது).
15. சிறிய சிறிய சச்சரவுகளுக்கெல்லாம் இடம் கொடுத்தால் பிறவிக்கடல் நீந்தும் நமது நோக்கத்திற்குத் தேவையான சக்தி
விரயமாகிவிடும்.


குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்


மனித வாழ்க்கை அறிவின் வளர்ச்சிக்குத் தக்கவாறு நான்கு விதமாக பிரித்து வகுக்கப்பட்டுள்ளது- பிரம்மச்சர்யம், கிரகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என்பதாக.


வாழ்க்கையில் எல்லாச் செயல்களும் இயற்கையும், அறிவும் இணைந்ததாகவே இருக்க வேண்டும். இயற்கைக்கு ஏற்ற முறையில் நான் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று யோசித்து திட்டமிட்டால் தான் இல்லறம் சிறக்கும். ஒழுக்க பழக்கங்கள், தொழிலறிவு, இயற்கை பற்றிய தெளிவு, இவையனைத்தும் குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் இருப்பது நல்லது. தனி மனிதன் தன் கடமைகளை உலகுக்குச் செய்ய இல்லறம் என்ற நல்லறம் மூலம் தான் முடியும். ஒருவர்க்கொருவர் மனமொத்து உதவும் ஒரு நட்பு வாழ்க்கைக்குத் தேவை. இருவரின் மனம் ஒத்த, மதிப்புணர்ந்த வாழ்க்கை வாழ இறை வழிபாடு, அறநெறி இரண்டும் வேண்டும்.


திருமணம் செய்து குடும்பம் ஏற்கும் போது உச்சியில் முடி வளர்த்து குடுமி வைப்பார்கள். அது உண்மையில் 'குடும்பி' என்பதன் அடையாளமே. குடும்ப வாழ்வின் நிறைவு பெற்ற பின் குடும்பி யோசிக்க வேண்டும். நான் வந்த நோக்கம் என்ன? இல்லறம் முடிந்து அறிவறிந்து இறைவனை அடைய வேண்டும். ஆன்மாவை அரிய யோகம் பயில வேண்டும். இதன் காலம் வானப்பிரஸ்தம்.


இறைவன் தான் எல்லாமாக உள்ளான். எனக்குத் தெரிந்த அறிவு, உழைப்பை சமூகத்துக்கு நான் கொடுக்க வேண்டும் என்று இல்லறத்தில் இருப்பவர் நினைப்பது அவர் தம் சமூகக் கடமை. அந்தக் காலத்தில் மக்களுக்கு சேவை செய்யவே மகான்கள் துறவு மேற்கொண்டார்கள்.


ஒருவருக்கொருவர் மனமொத்து உதவி செய்யக்கூடிய நட்பு இல்லறத்தில் தான் அமைய முடியும். வாழ்க்கை சிறக்கும். உடல், உயிர், மனத்தேவைகள் நிறைவு பெற பொருத்தமான வாழ்க்கைத் துணை அமைய, ஒருவரை ஒருவர் மதித்து, நட்பு அன்போடு வாழ இறை வழிபாடு, குடும்பத்தினரிடம் அன்பு, கருணை, நட்பு நலம், மன்னிப்பின் மேன்மை, நன்றி முதலிய பண்புகளை அறிந்து நடக்க வேண்டும்


இறைவனுக்குள்ளாக நாமிருக்கிறோம். நமக்குள் இறைவன் நிறைந்துள்ளான். கோடிக்கணக்கான கோள்கள் சூரியன்கள் சுத்த வெளியில் மிதந்து உருண்ட வண்ணம் உள்ளன. இவ்வளவையும் தாங்கி நடத்துவது இறைவெளியே தான். நம்முள் ஆறாவது அறிவாக இருந்து நம்மை இயக்கி வழி நடத்துவது கடவுள். 'கட+உள்' என்றால் நமக்குள் கவனித்து பார்ப்பது. இதை உணர்ந்தால் நம் உடலே ஓர் ஆலயம் தான். ஆன்மாவே இறைவன், 'நாம் செய்வதையெல்லாம் இருப்பில் வைத்து பலனை அளிப்பது ஆத்மா'.


கணவன், மனைவி இருவரும் ஒருவர் வினையை இன்னொருவர் கூட இருந்து தூய்மை செய்து வாழ்வதே இல்லறம். இருவரிடையே பிணக்கு வரக் கூடாது. மன அலையை குறைத்து தியானம் பழக அமைதி அலை நிலைத்து விடும். சிந்தனை சிறக்கும். வெறுப்பு உண்டாகாது. அன்பும், கருணையும் தழைக்கும். காதல் பிரகாசிக்கும். சிறு தவறுகளை மன்னிக்கும் தன்மை மேம்படும். ஒருவருக்கொருவர் என்ன தேவையோ செய்யும் மனம் உண்டாகும். இதற்கு வேண்டிய அனைத்து பயிற்சிகளும் மனவளக்கலையில் தருகிறோம். உடலில் உள்ள உயிராற்றல் உடலுக்கு அப்பால் விரிந்து வீணாகாமல் வாழ்க்கைக்கு ஆதாரமாகும்.


சினம், கவலை, ஏமாற்றம் வெறுப்பு முதலியன வாழ்க்கைத் துணையை துன்பம் கொள்ளச் செய்வதை உணர்ந்து நாம் திருந்த வேண்டும். அன்பும், புரிந்து கொண்ட தன்மையும் மாறக் கூடாத. அறிவு விழிப்பு நிலையில் இருந்தால் உணர்ச்சி வசப்படுவதை தடுக்கலாம். மனதில் நம் தவறுகளை உணர்ந்து அகத்தாய்வு செய்து பெற்றோரிடமும், உற்றாரிடமும் மன்னிப்பும், திருந்தியும் வாழலாமே?


விட்டுக் கொடுத்தல், தியாகம், பொறுமை, இவை நம் பட்டப் படிப்புகள் ஆகி விடும். வினைகள் தீரும் ஒரு ஆராய்ச்சி சாலை ஆகி விடும். உங்கள் அண்மையில் உள்ளோர், குடும்பத்தினர் யாவரும் இதையே பின்பற்றுவார்கள். இதை விட பெரிய சமூக சேவை வேறு எதுவும் இல்லை.


குடும்ப மகிழ்ச்சி


கணவன் மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள்.


கணவன் மண வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் மகிழ்வாய் குடும்பம் நடத்த ஆசைதான். அது சிலருக்கு எளிதாகவும் அனேகருக்கு சிரமமாகவும் இருக்கிறது.


குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை?
கணவன் மனைவி எதிர்பார்ப்புகள் என்னென்ன?
குழந்தைகளை தன்னம்பிக்கையுடன் வளர்ப்பது எப்படி?
குடும்ப மகிழ்ச்சியில் உறுப்பினர்களின் பங்கு என்ன?
வரவு, செலவை வரையறுப்பது எப்படி?
குடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை?
1. வருமானம்
2. ஒத்துழைப்பு
3. மனித நேயம்
4. பொழுதுபோக்கு
5. ரசனை
6. ஆரோக்கியம்
7. மனப்பக்குவம்
8. சேமிப்பு
9. கூட்டு முயற்சி
10.குழந்தைகள்
கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?
1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
2. மனது புண்படும்படி பேசக் கூடாது.
3. கோபப்படக்கூடாது.
4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது
5. பலர் முன் திட்டக்கூடாது.
6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்
10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.
12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
17. ஒளிவு மறைவு கூடாது.
18. மனைவியை நம்ப வேண்டும்.
19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.
22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது உன் குழந்தை ‘ என்று ஒதுங்கக் கூடாது.
27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.
31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.
37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.
மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?
1. பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல்.
2. காலையில் முன் எழுந்திருத்தல்.
3. எப்போதும் சிரித்த முகம்.
4. நேரம் பாராது உபசரித்தல்.
5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.
6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.
7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.
8. அதிகாரம் பணணக் கூடாது.
9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.
10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.
11. கணவனை சந்தேகப்படக் கூடாது.
12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.
13. பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.
14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.
15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.
16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.
17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது.
18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
19. கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.
20. கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.
21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
22. எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.
23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.
24. தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.
25. அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.
26. குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.
27. சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.
28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.
29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
30. உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.
31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.
32. உடம்பை சிலிம் ஆக வைத்துக் கொள்ள வேண்டும்.


பிள்ளைகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்பது எப்படி?
தன்னம்பிக்கை என்பது மனித வாழ்க்கைக்கு ஒரு நெம்புகோல் போன்றது. அது இல்லையேல் வாழ்க்கை இல்லை. இதனைப் பெற்றோர் தம் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும்.
சுயமாகச் சிந்திக்க, சுயமாகச் செயல்பட குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். படிப்பில் , அதோடு கூட வீட்டு வேலைகளில் குழந்தைகளுக்குப் பெற்றோர் போதிய பயிற்சி அளிக்க வேண்டும்.
குழந்தைகளை அச்சுறுத்தி அடித்துக் கண்டிக்கக் கூடாது.
ஆனாலும் அதன் போக்கில் எதேச்சையாக விட்டுவிடக் கூடாது. குழந்தைகளுக்கு அனபுப்பால் ஊட்டி, அரவணைத்துப் பெருமைப் படுத்த வேண்டும் .’நீ ராசா அல்லவா? ராசாத்தி அல்லவா?’ என்கிற வாசகங்கள் பெற்றோர் வாயிலிருந்து வர வேண்டும். ‘மக்கு, மண்டு, மண்டூகம் – போன்ற வாசகங்கள் மலையேற வேண்டும். பயம், கூச்சமின்றி, உறுதியான நெஞ்சம், உண்மையான பேச்சு, உயர்வான பண்பு இவை குழந்தைகளுக்கு அமைய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?
பொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால்தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக டிக் செய்து கண்டு பிடியுங்கள். பின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள்.
1. அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள்.
2. ஒருவறையொருவர் குறை கூறும் பழக்கம்.
3. அவரவர் வாக்கைக் காப்பாற்றத் தவறுதல்.
4. விரும்பியதைப் பெற இயலாமை.
5. ஒருவரையொருவர் நம்பாமை.
6. ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதில்லை.
7. உலலாசப் பயணம் போக இயாலாமை.
8. ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை.
9. விருந்தினர் குறைவு.
10. பொருள்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல்.
11. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இலலை.
12. விட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு.
13. ஒருவர் மனம் புண்படும்படியாகப் பேசுதல்.
14. மகிழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு.
உங்கள் பங்கு என்ன?
உங்கள் குடும்பம் மகிழ்வாக இருக்க அல்லது அதில் மகிழ்ச்சியைக் குறைக்க, தான் எந்த அளவு காரணம் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து இல்லாததைக் கொண்டு வர வேண்டும்.
1. அன்பாகப் பேசுவது
2. பிறர் மீது அக்கறை காட்டுவது.
3. வீட்டை அழகாக வைத்துக் கொள்வது.
4. குறை கூறாமல் இருப்பது.
5. சொன்னதைச் செய்து கொடுப்பது.
6. இன்முகத்துடன் இருப்பது.
7. முன் மாதிரியாக நடந்து கொள்வது.
8. பிறரை நம்புவது.
9 .ஒன்றாக பயணம் போக விரும்புவது.
10. பணிவு
11. எதையும் எடுத்த, உரிய இடத்தில் வைப்பது.
12. பிறர் வேலைகளில் உதவுவது.
13. பிறருக்கு விட்டுக் கொடுப்பது.
14. பிறர் வருந்தும் போது ஆறுதல் கூறுவது.
15. சுறுசுறுப்பு
16. சிறிய விசயங்களைக் கூடப் பாராட்டுவது.
17. புதிய முயற்சிகளை ஊக்குவிப்பது.
18. நகைச்சுவையாகப் பேசுவது.
19. அதிகமாக வேலை செய்ய விரும்புவது.
20. செலவுகளைக் குறைக்க ஆலோசனை கூறுவது.
21. நேரம் தவறாமை.
22. தற்பெருமை பேசாமல் இருப்பது.
23. தெளிவாகப் பேசுவது.
24. நேர்மையாய் இருப்பது.
25. பிறர் மனதைப் புண்படுத்தாமல் இருப்பது.
எதற்கும் யார் பொறுப்பு?
நமது அனைத்து நன்மை தீமைகளுக்கும் நாமே பொறுப்பு. அன்றாடம் அனேகம் பேரைச் சந்திக்கிறோம் உதவி கேட்கின்றோம். ஆணையிடுகிறோம்.
அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெற்றி பெறுகிறோமா? பல நேரங்களில் பகையும், பிரச்சனைகளுமே மிஞ்சுகின்றன. விளைவாக: விரக்தியும், இரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி, தீராத கவலை, அமைதியின்மை, மது, சிகரெட் பழக்கம், தூக்க மின்மை, ஒத்துப்போக இயலாமை, உணர்ச்சி வசப்படுதல் அஜீரணம்
ஏன் இந்த நிலை?
நாம் மகிழ்வாக இருக்க, நம்மால் பிறரும் மகிழச்சி பெற, பிறர் நம்மை விரும்ப, பிறர் மத்தியில் நம் மதிப்பு உயர, பிறரிடம் நம் காரியங்களைச் சாதித்துக் கொள்ள பத்து கட்டளைகள்
பத்து கட்டளைகள்
1. அன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள்.
2. ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்.
3. இன்சொல் கூறி நான், எனது போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.
4. உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள்.
5. ஊக்கத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள்.
6. எப்போதும் பேசுவதைக் கேட்டு, பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப் பேசுங்கள்.
7. ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துடன், பிறர் குறைகளை அலட்சியப் படுத்துங்கள்.
8. ஐங்குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்.
9. ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள்
10.ஓஹோ, இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள்.
நன்றி: ஈகரை தமிழ் களஞ்சியம்
source: saintvethathiri.blogspot.com
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன் வேதாத்திரி மகரிஷி www.vethathiri.edu.in

ஆறு ஆதாரங்களும், சுவாசமும்

ஆறு ஆதாரங்களும், சுவாசமும்.


முதுகெழும்பின் மேல் இருந்து கீழ்வரை அதாவது உட்சந்தலையில் இருந்து முதுகெழும்பின் அடிப்பாகம் வரை ஏழு ஆதாரச்சக்கரங்கள் எனப்படும் நாளமில்லாச் சுரப்பிகள் அல்லது காங்க்ளியன் மையங்கள் எனப்படும் நரம்புகள் இணைப்பு மையம் உண்டு. நாடி நரம்புகளும்,முடுகெழும்பின் பகுதியோடு இணைக்கப்பட்டிருக்கும். இடமே சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை, சகஸ்ராரம் எனப்படும். ஒரு நாளைக்கு ஒவ்வொரு ஆதாரச் சக்கரங்களிலும் நடக்கும் சுவாசக் கணக்கு.

சக்கரம் சுவாச எண்ணிக்கை சுவாச நேரம்.
மூலாதாரம் 600  காலை ----06.00--06.40 வரை
சுவாதிட்டானம் 6000 காலை-----06.40--மதியம். 1.20 வரை
மணிபூரகம் 6000 மதியம் ----01.20. இரவு 8 மணி வரை
அனாகதம்  6000 இரவு -------8.00-- அதிகாலை 2.40 வரை
விசுக்தி 1000 அதிகாலை --0.2.40 --3.40 வரை
ஆக்ஞை 1000 அதிகாலை--03.46---04.53 வரை
சகஸ்ராரம் 1000 அதிகாலை --04.53 காலை 06.00 வரை.
மொத்தம் 21.600
இப்படியாக சுவாசம் ஒவ்வொரு ஆதாரச் சக்கரத்திலும். நடந்து அந்தந்த சக்கரங்களை உக்குவிக்கின்றன ஆதாரச் சக்கரங்களில் சுவாசம் நடக்காத போது உயிரோட்டத்தில் ஒரு மின்குறுக்கு (SHORT CIRCUIT) ஏற்பட்டு வலியும்,நோயும், மரணமும். சம்பவிக்கிறது
அப்போது எந்த சக்கரத்தில் உயிரோட்டம் குறைவு ஏற்பட்டுள்ளது. என்பதை வைத்தியர் அறிந்து அந்தந்த சக்கரத்திற்கு ஏற்ப மருந்து கொடுப்பார் உயிரோட்டம் குறைவுள்ள
சக்கரம் கைவைத்துப் பார்த்தால் வெப்பமாக, சூடாக இருக்கும்.
_ Arulnithi Poongulali Shanmugam Vazhga Valamudan

காயகல்ப யோகம்

காயகல்ப யோகம்.
மனவளக் கலையில் காயகற்பப் பயிற்சி எனும் ஒரு அற்புதமான மனித வளப் பயிற்சி அளிக்கப்படுகிறது. விந்து நாதம் எனும் மூலப்பொருட்களைத் தூய்மை செய்து அவற்றின் வலுவையும் அளவையும். தரத்தையும் உயர்த்தும் எளிய பயிற்சி ஆகும் அது.
நாம் உண்ணும் உணவு. 1. ரசம் 2. ரத்தம் 3. சதை 4. கொழுப்பு 5. எலும்பு 6. மஜ்ஜை மற்றும் 7. சுக்கிலம் என்ற ஏழு தாதுக்களாக முறையே ஒன்றிலிருந்து மற்றொன்றாக இறையாற்றலால் மாற்றப்படுகின்றன. இந்த உடலியக்க விஞ்ஞானத்தைப் பற்றி சிந்தனையாளர்களுக்கும் மருத்துவ  விஞ்ஞானிகட்கும் நன்கு தெரியும். இவற்றில் சுக்கிலம் (விந்து-நாதம்) எனும் 'சீவ இன அனைத்தடக்கப் பொருள்' தான் மனித உடலினது தோற்றம் தன்மை வளர்ச்சி இயக்கம் விளைவுகள் அனைத்துக்கும் அடிப்படை ஆற்றலான மிக மதிப்புடைய பொருளாகும்.


உயிரினங்களின் பிறப்பு இறப்பு இரண்டு நிகழ்ச்சிகட்கும் வித்து எனும் சீவசக்தியே காரணம் ஆகும். ஒரு விதையில் ஒரு முழு மரம் காந்த அலைவடிவில் சுருங்கி இருப்பதைப் போலவே விந்துநாதக் குழம்பில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் மனித வடிவமே சுருங்கி இருக்கிறது. மேலும் பரிணாமத் தொடராக வரும் செயல்கள் எண்ணம் இவற்றின் அலைகளைச் சுருக்கிப்பதிவாக வைத்திருக்கும் கருமையத்ததைத் தாங்கிக் கொண்டு இருக்கும் தெய்வீகத் திரவமும் வித்துவே (Sexual vital fluid) விந்து நாதத் திரவமே ஆகும். இத்தகைய மதிப்பு வாய்ந்த வாழ்க்கை நலநிதியான விந்துநாதத் திரவங்களை மனிதவள மதிப்பறியாமல் மக்களில்
பெரும்பாலோர் வீணாக்கியும் கெடுத்தும் விடுகிறார்கள். இந்தக் குறைபாடு மனித வளத்தை மிகவும் தாக்கிச் சீரழிக்கின்றது. இதனால் தான் தனிமனிதன் குடும்பம் சமுதாயம் உலகம் என்ற அளவில் மனித இன வாழ்வில் கணிக்க முடியாத எண்ணிக்கையில் சிக்கல்களையும் துன்பங்களையும் விளைவிக்கின்றன. இந்த உண்மைகளை அறிந்த சித்தர்கள் எனும்
மனிதவள விஞ்ஞானிகள் வித்துவைத் தூய்மை செய்து வளப்படுத்தும் பயிற்சியை உலக மக்களுக்கு வழங்கியுள்ளார்கள். இந்தப்பயிற்சி தான் காயகற்பம் எனும் மனித வளப் பயிற்சியாகும். நீண்ட காலமாக இந்தக் காயகற்ப பயிற்சியானது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. எல்லாச் சித்தர்களுமே அவரவர்கள் எழுதிய நூல்களில் இந்தப் பயிற்சியைப் பற்றிச் சில குறிப்புகளை எழுதி உள்ளார்கள். எனினும் இதனைப் பயின்று பயன்
பெற்றவர்கள் நேர்முகமாகக் கற்றுக் கொடுத்தால் அல்லாது எவருக்கும் எழுத்தின் மூலம் இந்தப் பயிற்சியினை விளங்கிக் கொள்ள முடியாது.

உதாரணமாக
உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்
கருத்தினா லிருந்தியே கபாலமேற்ற வல்லீரேல்
விருத்தரும் பாலராவார். மேனியும் சிவந்திடும்
அருள்தரித்த அம்மைபாதம் ஐயன்பாதம் உண்மையே!
காயகற்ப பயிற்சியைப் பற்றி சித்தர்கள் எழுதி உள்ள பாடல்களில் இது ஒன்று.
இது சுத்த தமிழ் தான் என்றாலும் இதனைப் படித்து விட்டுக் காயகற்பப் பயிற்சியை ஒருவர் தெரிந்து பழக முடியாது. எனவே குரு என்னும் ஒரு நபரிடமிருந்து நேர்முறைப் பயிற்சி தான் தேவையாகின்றது. இந்தக் காயகற்ப பயிற்சி காலத்தால் பல பிரிவுகளாக்கப்பட்டுத் தூரக் கிழக்கு நாடுகளில் சிதறிக் கிடக்கின்றன. சித்த மருத்துவத் துறையில் எனக்கிருக்கும் ஆழ்ந்த பற்றுதலால் சித்தர்கள் அருளியுள்ள பல நூல்களையும் ஆராய்ந்ததோடு
எனது அருள் தொண்டு பயணத்தின் போது நான் சந்தித்த பல கீழ்நாட்டு உடற்பயிற்சி ஆசிரியர்கள் மூலம் திரட்டிய பல பயிற்சி முறைகளையும் ஒன்று இணைத்து 'மனவளக்கலைக் காயகற்பப்பயிற்சி' என்ற பெயரில் போதித்து வருகிறேன். இப்பயிற்சியை இதுவரை சுமார் இரண்டு லட்சம் பேருக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறேன். இந்த மனவளக்கலைக் காயகற்பப் பயிற்சியில் எனது இருபது ஆண்டுகால செயல்முறை அனுபவங்களும் இணைந்துள்ளன. இந்தப் பயிற்சியை மூன்று மணி நேரத்தில் ஒருவர் கற்றுக் கொள்ள முடியும். மனவளக் கலை மன்றங்களில் உறுப்பினராகி
வாழ்க்கைவள விஞ்ஞானம் பயில்வேலார்களுக்கு இந்தப் பயிற்சியும் சேர்த்துக் கொடுக்கப்படுகின்றது. முறை தவறிய வழிகளில்
விந்துவை நாசப்படுத்தி கொண்டு படிப்பில் விருப்பமில்லாமலும் நினைவாற்றல் குறைந்து வாழ்வில் சோர்வும் ஏமாற்றமும் காண்கின்ற இளைஞர்களுக்கு அவர்கள் வாழ்வைப் புதுப்பித்துக் கொள்ள இது ஒர் உயர்ந்த சாதனைவழி. ஆண் பெண் இருபாலரும் வயது பதினான்கு பதினைந்துக்கு மேல் காயகற்பப் பயிற்சியைக் கற்றுப் பயனடையலாம்.
திருமணம் வேண்டாம் என்று பொதுநல ஆன்மீகத் தொண்டில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இந்த அரிய காயகற்பக் கலை
நல்லதோர் தோழனாகப் பயன்படும்.

1. ஆயகலை கள்மொத்தம் கணக்கெடுத்தோர்
அறுபத்தி நாலுஎன்றார் அனைத்தும் கற்றும்
காயகற்ப மெனும்கலையைக் கற்கா விட்டால்
கற்றதெல்லாம் மண்புக்கும் உடல்வி ழுந்தால்
மாயமெனும் காந்தம்உயிர் வித்து மூன்றில்
மறைந்துள்ள இரகசியங்கள் விளங்கி வாழ்ந்தால்
தீயவினை கள்கழிய உலகுக் கென்றும்
தெளிவான அருள்ஒளியாய் நிலைக்கும் ஆன்மா
2. கறைபோக்கி வித்ததனை உறையச் செய்யும்.
காயகற்பப் பயிற்சியினால் உளநோய் நீங்கும்
நிறைமனமும் ஈகையோடு பொறுமை கற்பு
நேர்நிறையும் மன்னிப்பும் இயல்பாய் ஓங்கும்
இறையுணர்வு விழிப்புநிலை அறிவுக் கூர்மை
இனியசொல் எண்ணத்தின் உறுதி மேன்மை
மறைபொருளாம் மனம் உயிர் மெய் யுணர்வு கிட்டும்.
மாதவமாய்ப் பிறப்பிறப்புத் தொடர் அறுக்கும்!

காயகல்பம் உள்ளிட்ட உடல்பயிற்சிகளை நாள்தோறும் ஒழுங்காகச் செய்துவந்தால் நோயின்றி வாழலாம். உடலில் உள்ள
செல்கள் அனைத்திலும் உள்ள துருவ அமைப்பு சீராகும். மரபு வழியாக வந்த நோய்களைக் கூட சில மாதங்களில் போக்கி நலமடையலாம். சுருங்கச் சொன்னால் மனிதகுல வாழ்வில் உள்ள அனைத்துக் குழப்பங்களுக்கும் நீங்கி அமைதியும் நிறைவும் கொண்ட வாழ்வு அமையும்.

காயகற்பப் பயிற்சி பயன்கள்
1. உடல் நலம் சீரடையும்; ஆஸ்த்மா, சர்க்கரைவியாதி, குடல்புண், மூலம் போன்ற வியாதிகள் படிப்படியாக நீங்கும்,  மட்டுப்படும்.
2. உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி பெருகும்.
3. முதுமையைத் தள்ளிப்போடவும், முதுமையிலும் இளமை காத்து இனிய வாழ்வு வாழவும் வழி கோலும்.
4. பயனுள்ள நீள் ஆயுள் வாழ ஏதுவாகும்.
5. மாணவர்ப் பருவத்தில் நினைவுக் கூர்மை, ஓழுக்கம், கடமையுணர்வு ஒங்கும்.
6. தம்பதியரிடையே இணக்கமான இனிய உறவு அமையும்.
7. மனித வாழ்வில் ஆன்மீக உணர்வு மேலோங்கி வளர உதவும்.
இப்பயிற்சியை 14 வயதிற்கு மேல் ஆண் / பெண் இரு பாலரும் (எல்லா மதத்தினரும்) கற்று இன்புறலாம்.
வாழ்க வளமுடன் வேதாத்திரி மகரிஷி www.vethathiri.edu.in

வேதாத்திரியம்

வேதாத்திரியம்
Vethathiriyam; Vethathiri Maharishi Poem with Professor Vallal Ramamurthy Explanations

போரில்லா நல்லுலகம்; பொருள் துறையில் சமநீதி;
நேர்மையான நீதிமுறை; நிலவுலகுக்கோர் ஆட்சி;
சீர்செய்த பண்பாடு; சிந்தனையோர் வழி வாழ்வு;
சிறப்புணர்ந்த பெண்மதிப்பு; தெய்வ நீதி வழி வாழ்தல்;
தேர்த்திருவிழா தவிர்த்தல்; சிறுவர்கட்கே விளையாட்டு;
செயல்விளைவு உணர்கல்வி; சீர்காந்த நிலை விளக்கம்;
பார்முழுதும் உணவு; நீர் பொதுவாக்கல்; பல மதங்கள்
பல கடவுள் பழக்கம் ஒழித்து உண்மை ஒன்றை தேர்ந்திடுதல்.

ஆசான் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் இந்த சமுதாய
மக்களை மேம்படுத்துவதற்காக வேதாத்திரியம் என்ற தலைப்பில்
நமக்கு அளித்துள்ள பதினான்கு தத்துவங்களின் தொகுப்பே இந்த
கவிதை. நோக்கம் உலக அமைதி. ஒவ்வொரு தலைப்பும் மக்களின்
விழிப்புநிலையை உயர்த்துவதே ஆகும். அவைகளை தனித்தனியாக
பின்னர் சிந்திப்போம். இந்த நன்னாள் முதல் நாம் அனைவரும்
தினமும் உலக அமைதி விரைவில் கிடைக்க இறை அருளையும்,
குரு அருளையும் பிரார்த்திப்போம். வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள்.

வேதாத்திரியம் (1) போரில்லா நல்லுலகம்:
உலகமென்ற மண்மீது அனைவரும் பிறந்தோம்,
உயிர்காக்கும் காற்று ஒன்றே மூச்சு விடுவதற்கு
உலகெங்கும் ஒளி வீசும் சூரியனும் ஒன்றே
உள்ள கடல் ஒன்றே நீர் ஆவியாகிப் பொழிய
உலகில் இன்று உள்ளோர் இதிலொன்றும் செய்ததில்லை
ஒவ்வொருவரும் பிறந்து வாழ்ந்து செத்துப் போவார்.
உலகில் ஒரு குழுவினர் மற்றவரைக் கொன்று
உயிர் வாழ்தல் நீதியெனில் கொலைஞர்களே மிச்சம்.

உலகில் பிறந்த நாம் யாரும் நாம் சுவாசிக்கும் காற்றையோ,
உலகிற்கு ஒளிகொடுக்கும் சூரியனையோ, நம் வாழ்க்கைக்கு
அவசியமான நீரையோ, இந்த நிலத்தையோ செய்யவில்லை.
ஆனால் அதற்கு உரிமையை மட்டும் அனைவரும் பெற முயற்சியை
மேற்கொள்கிறோம். இதன் விளைவே உலகில் போர் உருவாகிறது.
போரினால் ஏற்படும் துன்பங்களை ஒரு நிமிடம் உலக மக்கள்
சிந்தித்துப் பார்க்கவேண்டும். எவ்வளவு இழப்பு ஏற்படுகிறது.
பொருள் இழப்பு, உயிர் இழப்பு, உறுப்புகள் இழப்பு, குடும்ப உறுப்பினர்
இழப்பு, இப்படி என்னும் எவ்வளவோ. இவைகளில் எதையும் நம்மால்
ஈடு செய்யமுடியுமா. யோசிக்கவேண்டும். உலக அறிஞர் பெருமக்கள்
ஒன்றுகூடி ஒரு திட்டம் தயாரிக்கவேண்டும். இந்தப் போரை எப்படி
தவிர்ப்பது என்று ஆராய வேண்டும். ஏற்கனவே நம்மிடம் இருக்கின்ற
ஐக்கிய நாடுகள் சபையைக் கூட்டி, அச்சபையில் உள்ள பாதகாப்புச்
சபையின் பொறுப்பில் எல்லா நாடுகளின் எல்லைப் பாதுகாப்பையும்
கவனிக்கும் பொறுப்பையும் கண்காணிக்கும் பொறுப்பையும் அளிக்க
வேண்டும். எல்லா நாடுகளும் அதன் அதிகாரத்திற்கு ஒத்துழைப்பு
நல்கவேண்டும். போரைத் தவிர்க்க முடியும். போருக்காகும் செலவுகளை நாட்டின் வளர்ச்சிப் பணிகளுக்கு செலவழிக்க வேண்டும். உலகம் அமைதி பெரும். வறுமை நீங்கும். ஒற்றுமை உருவாகும்.

வேதாத்திரியம் (2) பொருள் துறையில் சமநீதி:
வீடு தொழிற்சாலை விளைநிலம் வியாபாரம்
விஞ்ஞான இயந்திரங்கள் ஆட்சி பீடம்
பாடுபடும் மக்கட்குப் பொதுவாய் ஆக
பலபடியில் கூட்டுறவு முறை வகுத்து
நாடு வளம் பெற்றுலகத் திணைப்பைக் கொண்டு
நல் வாழ்வு கிட்டுவதற்கு ஏற்றவாறு
ஈடு இணையற்ற ஒரு திட்டம் வேண்டும்
இம் முறையே மக்களுக்கு நலம் பயக்கும்.

உலகில் வாழ் மக்கள் அனைவருக்கும் வாழ்க்கைத் தேவைகளை
நிறைவு செய்வதற்கு ஏற்ற வகையில் அவர்களுக்கு பொருளாதார
வளம் அமையவேண்டும். பணம் என்பது உழைப்பின் அடையாளம்
(token of labour is money).
உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் வழங்கப்பட
வேண்டும். மேலும் ஒருவரின் ஊதியம் இன்னொரு குடும்ப
உறுப்பினருக்கும் நிறைவு செய்யக்கூடிய அளவில் அமையவேண்டும்.
உழைக்கத் தெரியாத, உழைக்க முடியாத மக்களுக்கும் ஏற்றதொரு
வாழ்வாதாரத்தை அரசு அமைக்கவேண்டும். மேலும் உலகில்
ஒருவர் உழைப்பை இன்னொருவர் பறித்துண்ணும் போக்கு வெகு
அதிகமாகவே உள்ளது. இது மக்களிடம் மட்டுமல்ல, ஆட்சியாளரிடம்
கூட அமைதுள்ளது. இந்த நிலை மாறவேண்டும். எல்லோருக்கும்
வேலைவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். அனைவரும் உழைத்துண்டு
வாழ வேண்டும். உழைப்பின் அவசியத்தை அனைவரும் அறியவேண்டும். இதற்கு ஏற்றவகையில் ஓர் உலக ஆட்சி அமைந்து
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க இறை அருளும் குரு அருளும்
துணை புரியட்டும். வாழ்க வளமுடன்.

வேதாத்திரியம் (3) : நேர்மையான நீதிமுறை:
கொலை செய்தான் ஒரு மூர்க்கன் அறிவிழந்து
கொள்டையுண்டான் நீதிபதி அளித்த தீர்ப்பால்
கொலைக்கு கொலை நீதியென்றும் குற்றம் செய்த
கொடுமைக்கே தண்டனைகள் என்றும் சொன்னால்
கொலையுண்டோர் மனைவி மக்கள் பெற்றோர் செய்த
குற்றமென்ன? குடும்பத்தின் தலைவன் ஆங்கே
கொலையுண்ட நிகழ்ச்சி அன்னார் வாழ்வில் என்றும்
கொடுந்துன்பம் தரவில்லையா? நீதி எங்கே?

நீதி என்பது நேர்மையாக இருக்க வேண்டும். குற்றம் புரிந்த ஒருவன்
தக்க சாட்சி இல்லாமல் தப்பிவிட்டாலும், அது பெரும் தவறு அல்ல.
ஆனால் ஒரு நிரபராதி எந்த சூழ்நிலையிலும் தண்டனைக்கு ஆளாக
நேரிடக்கூடாது. பொதுவாக இந்த நீதி எல்லா நாடுகளிலும் உள்ளது.
ஆனால் ஒருவன் கொலை செய்தான் என்ற குற்றத்திற்காக அவனுக்கு
நீதிமன்றம் தூக்கு போன்ற கொலை தண்டனை வழங்குகின்றது. கொலை செய்தவனுக்கு தண்டனை என்பது சரி என்றாலும், அவனுக்கு
மரண தண்டனை நிறைவேற்றிய பிறகு அவனின் மமைவி, மக்கள்,
பெற்றோர், உறவினர்கள் எவ்வளவு துன்பம் அடைகின்றார்கள்.
இவர்கள் என்ன குற்றம் செய்தார்கள்? இவர்களுக்கு எதற்கு தண்டனை?
அறிவற்றவன் செய்த கொலைக்கு அறிவில் சிறந்த நீதிபதி அளித்த
தண்டனையும் கொலைதானே? இது நீதி அல்லவே. மேலும் ஒருவன்
குற்றவளியாகிறான் என்றால் அவனுக்கு தேவையான வாழ்க்கை
தேவைகள் நிறைவேற போதிய வேலை வாய்ப்பு போன்றவற்றை
அளிக்காத சமுதாயமும் குற்றவாளிதானே? மேலும் நீதி என்பது
நேர்மையான முறையில் அமைய ஆன்றோர்கள் சிந்தித்து நல்ல
சட்டங்களை இயற்றவேண்டும். அதை செயல்படுத்த சிறந்த அரசும்
அமைய வேண்டும். வாழ்க வளமுடன்.

வேதாத்திரியம் (4): நிலவுலகுக்கோர் ஆட்சி:
ஓர் உலக ஆட்சி உயர் ஒழுக்கத்தோடு
உலகினிலே குழந்தைகளை வளர்க்கும் திட்டம்
பார் முழுதும் பொருள் துறையில் சமநேர் நீதி
பல நாடும் ஒன்றிணைந்த பொருளாதாரம்
சீர்திருத்தச் சிக்கனமாம் சிறந்த வாழ்வு
தெய்வநிலை யகத்துணரும் இறைவணக்கம்
நேர் வழியில் விஞ்ஞானம் பயனாய்க் கொள்ளும்
நெறிமுறைகள் இவையினைந்த வாழ்வு காண்போம்.

ஐக்கிய நாடுகள் சபைக்குப் போதிய அதிகாரம் அளித்து உலக நாடுகள்
ஒன்றிணைந்து உலகிலுள்ள எல்லா ஆட்சி எல்லைகளையும்
பாதுகாக்கும் பொறுப்பைக் கூட்டாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இப்போதுள்ள எல்லைத் தகராறுகளை .நா. சபை ஏற்படுத்தும் நீதிமன்றத்தின் மூலம் எல்லா நாடுகளும் எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்ளக்கூடிய திட்டமும் செயலும் நாம் கொடுக்கும் திட்டத்தின் சாரமாகும். எல்லைகளின் பாதுகாப்பு . நா. சபை மூலம் உலகம் ஏற்றுக்கொண்டால் தனித்தனியே எந்நாட்டுக்கும் ராணுவம் தேவைப்படாது. இன்றுள்ள ராணுவ அமைப்புச் செலவையும், போர்
வீரர்களின் சேவையையும், பின்தங்கிய நாடு, பின்தங்கிய மக்கள்
இவர்கள் முன்னுக்கு வரவேண்டிய சேவைகளில் .நா. சபை மூலம்
ஈடுபடுத்தி விடலாம். ராணுவத்தின் செலவும் ஆற்றலும் மக்கள் நல
சேவைக்குத் திருப்பப்பட்டுவிட்டால் பதினைந்து ஆண்டுக்
காலத்திற்குள்ளாக உலகிலுள்ள ஒவ்வொரு நாடும் சமமான
பொருளாதார வசதியோடும், அன்பு வளம் பெற்ற உள்ளங்களோடும்
அமைதியாக வாழ முடியும். உலகெங்கும் ஊர் வாரியாக, நகர்
வாரியாக, நாடுகள் வாரியாக இந்த திட்டத்தைப் பற்றிச் சிந்திக்கவும்,
எந்த பிரிவினருக்கும் இழப்பில்லாத வகையில் உலக அமைதி ஏற்படத்
தக்கவாறு முடிவெடுத்துப் பின்பற்றலாம். இந்த பெருநோக்கச்
சேவையாற்ற வாக்கு, பொருள், ஆற்றல் என்ற எவ்வகையாலும்
உலகுக்குத் தொண்டு செய்ய வாருங்கள். கூடுங்கள். நலம் செய்து
நலம் கண்டு மகிழுங்கள் என்று அன்போடு அழைக்கின்றோம்.

வேதாத்திரியம் (5): சீர்செய்த பண்பாடு:
புதியதொரு பண்பாடு உலகுக்கு வேண்டும்
போதை, போர், பொய், புகை ஒழித்து அமுல்செய்வோம்
அதிகசுமை ஏதுமில்லை அவரவர் தம் அறிவின்
ஆற்றலினால் உடல் உழைப்பால் வாழ்வதென்ற முடிவும்;
மதி பிறழ்ந்து மற்றவர்கள் மனம் உடல் வருத்தா
மாநெறியும், உணவுக்குயிர் கொல்லாத நோன்பும்,
பொது விதியாய்ப் பிறர் பொருளை வாழ்க்கைச் சுதந்திரத்தை
போற்றிக்காத்தும், பிறர் துன்பம் போக்கும் அன்பும் வேண்டும்.

நமது முன்னோர்கள் நெறி தவறி வாழும் மக்களை நெறிப்படுத்த
பல வழிகளில் முயற்சி செய்து பல பழக்க வழக்கங்களை உருவாக்கினர்.
இவைகளே பண்பாடு என்று வழங்கப்பட்டது. ஆனால் அவை அனைத்தும் எல்லா மக்களுக்கும், எல்லா நாட்டிற்கும், எல்லா காலத்த்திற்கும் ஏற்றதாக அமையவில்லை. இன்றைய வாழ்க்கை
முறைக்கு தேவையற்றவைகள் நிறையவே உள்ளன. எனவே எல்லா
காலத்திற்கும், எல்லா நாட்டிற்கும், எல்லா மக்களுக்கும் பொருந்தும்
வகையில் புதியதொரு பண்பாடு வேதாத்திரி மகரிஷி அவர்களால்
நமக்கு அளிக்கப்பட்டுள்ளது. எப்படி ஒரு வீட்டிற்கு நான்கு புறமும்
சுற்றுச்சுவர் அவசியமோ அதைப்போன்று ஒரு மனிதனின் ஒழுக்க
வாழ்க்கைக்கு போதை தரத்தக்க பொருள்களை உபயோகிப்பது, போர்புரிவது, பொய் சொல்வது, புகையிலைப் பொருட்களை உபயோகிப்பது ஆகிய நான்கையும் தவிர்த்து வாழவேண்டும்.
மேலும் ஐந்து ஒழுக்கநெறிகளை வாழ்வில் கடைபிடிக்கவேண்டும்.
அவை (1) அவரவர் அறிவாலும், உடல் உழைப்பாலும் வாழ்தல்;
(2)
மற்றவர்கள் உடல், மனம் வருத்தாமல் வாழ்தல்;
(3)
உணவுக்காக உயிர்கொலை புரிவதை தவிர்த்தல்;
(4)
பிறர் பொருட்களை, வாழ்கை சுதந்திரத்தை போற்றிக்காத்தல்;
(5)
பிறர் துன்பத்தை முடிந்த அளவு போக்கும் அன்பு ஆகியவை வேண்டும். இவை எக்காலத்திற்கும் எல்லோருக்கும், எல்லா மக்களுக்கும் பொருந்தக்கூடிய புதிய பண்பாடு ஆகும்.

வேதாத்திரியம் (6): சிந்தனையோர் வழி வாழ்வு:
வாழவேண்டும் என்றெண்ணி மனிதனாக
வந்ததில்லை, எனினும் நாம் பிறந்துவிட்டோம்.
வாழவேண்டும், உலகில் ஆயுள் மட்டும்,
வாழ்ந்தவர்கள் அனுபவங்கள் தொடர்ந்து பற்றி.

இன்று உலகில் வாழ்கின்ற மக்கள் எப்படி வாழவேண்டும் என்று
அறியாமல், தானும் துன்புற்று, பிறரையும் துன்புறுத்தி வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள். அனைவருமே துன்பமற்ற இன்பமான
வாழ்வைத்தான் விரும்புகிறோம். ஆனால் இன்பத்தைக் காட்டிலும்
துன்பமே மிகுந்து காணப்படுகிறது. காரணம் யாதெனில் நம்
செயல்களே. அவற்றை சீரமைத்து ஒழுக்கமான வாழ்க்கை நாம்
மேற்கொண்டால் உலகம் முழுவதிலும் இன்பமே நிலைத்திருக்கும்.
ஆன்றோர் பெருமக்கள் கூறும் சிறந்த சிந்தனைகளை பின்பற்றி,
அவர்கள் வழிநின்று நமது எண்ணம், சொல், செயல்களை சீரமைத்து
வாழ்ந்து, நாமும் இன்புற்று, சமுதாயத்திற்கும் இன்பத்தை அளிக்க
முயற்சி செய்வோமாக. குருவருளும் திருவருளும் நமக்கு துணை
புரியட்டும். வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.

வேதாத்திரியம் 7 : சிறப்புணர்ந்த பெண் மதிப்பு:
எல்லையற்ற ஆற்றலுள்ள இறைவன் திருவுள்ளமென்ன
எவ்வுயிரும் தோன்றுதற்கு ஏற்றதொரு திருவழியாய்
வல்லமையாய்ப் பெண்ணினத்தை வடிவமைத்தான் அற்புதமே
வாழுகின்ற மக்களில் இவ்வளம் அறிந்தோர் எத்தனை பேர்?

பெண்மையின் சிறப்பினை அன்றுதொட்டு இன்றுவரை பலர்
எடுத்துரைத்தாலும், சிலர் பெண்மையினை இரண்டாம் தரமாகவே
நடத்தி வருகின்றனர். இந்நிலையை மாற்றி பெண்மையை போற்றவும், சிறப்பிக்கவும் சில சிந்தனையாளர்கள் முயன்று வருகிறார்கள்.
அவர்களுள் நமது அருட்தந்தை மிக முக்கிய பங்கு வகிக்கிறார். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருக்கிறாள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஒரு குடும்பத்தினை நடத்துவது, குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவது, முதியோர்களை பராமரிப்பது, இப்படி பெண்களின் பங்கு மிகவும் போற்றுதற்குரியது. ஆனால் இவர்களின் சிறப்பு பெரும்பாலும் பலரால் அறிந்துகொள்ளப் படுவதில்லைஇவ்வுலகில் வாழுகிற ஜீவராசிகள் அனைத்திற்கும் பிறப்பிடம் பெண்மையே... இத்தகைய பெண்ணினம் கல்வி, பொருளாதாரம், வாழ்க்கை வளம் அனைத்திலும் உயர்வு நிலை பெறுவதே சமுதாயத்திற்கும், குடும்பத்திற்கும் சாலச்சிறந்தது. இன்று உலகில் 700 கோடி மக்கள் இருக்கிறார்கள். இவர்களில் பாதிபேர் ஆண்கள். இவர்களை பெற்றெடுத்தது பெண்களே. ஆண்கள் அனைவரும் பெண்களின் அன்பளிப்பு எனில் அது மிகை ஆகாது. பெண்மையை போற்றுவோம். வாழ்த்துவோம்.

பெண்ணினத்தின் சிறப்பை உணர்ந்தே உள்ளேன்,
பேருலகில் வாழுகின்ற மக்கள் எல்லாம்
பெண்ணினத்தின் அன்பளிப்பே எனில் இதைவிட
பெருமை வேறென்ன எடுத்துச் சொல்வதற்கு.

வேதாத்திரியம் (8): தெய்வ நீதி வழி வாழ்தல்:
இறைநிலை என்ற பேராற்றல்
எங்கும் உள்ளது நீக்கமற
மறைவாய் இருந்து அது ஆற்றும்
மாபெரும் செயலை நினைத்திடுவோம்
உணவை உண்போம் நாள்தோறும்
உடலாய் அதனை மாற்றுவது யார்
கணமும் நம்மைப் பிரியாமல்
கருத்தாய் இருந்து ஊக்குவது யார்
உலகம், நிலவு, சூரியன்கள்,
உயிர்களனைத்தும் படைத்தது யார்
பலவும் ஒழுங்காய் முறைபிறழா
பாங்கில் இயக்கி வருவது யார்
அவரே தெய்வம், பேராற்றல்
அறிவைக் கொண்டே வணங்கிடுவோம்.

தெய்வம் என்கிற இறைநிலை எங்கும் நிறைந்துள்ளது, அது
தனக்குள்ளும் அறிவாக இருந்துகொண்டு, தான் செய்வதையெல்லாம்
கண்காணித்துக்கொண்டிருக்கிறது என்பதை அறியாத மனிதன்
உணர்ச்சிவயப்பட்டும், அலட்சியமாகவும் செயல்களை செய்து
தானும் துன்புற்று, சமுதாயத்திற்கும் துன்பத்தைக் கொடுக்கின்றான்.
நமது செயல்களுக்கு விளைவாக இறைநிலையே வெளிப்படுகின்றது
என்ற்கிற உண்மையை உணர்ந்து, நமது எண்ணம், சொல், செயல்களை
ஒழுங்குபடுத்தி வாழ்வதே தெய்வநீதி வழி வாழ்வதாகும்.

வேதாத்திரியம் (9): தேர்த் திருவிழா தவிர்த்தல்:
கடவுள்தான் அனைத்தையுமே படைத்தான் என்றேன்
கண்காது மூக்கு வைத்துக் கதைகள் சொன்னேன்
கடவுள் என்ற கற்சிலையை அறையில் வைத்துக்
கதவு அடைத்துப் பூட்டியும் வைத்தேன்; பின் அந்தக்
கடவுளுக்குப் பசிதீர்க்க பால், நெய், தேங்காய்
கனிவகைகள் கற்சிலைமுன் படித்தேன்; ஆனால்
கடவுள் நிலை அறிந்தபோதென் செய்கை யெல்லாம்
கண்டு விட்டேன் சிறுபிள்ளை விளையாட்டாக.

வேதாத்திரியத்தில் இன்று நாம் சிந்திக்கக் கூடியது மிக உயர்ந்த ஒரு
கருத்தைப் பற்றியது. இறைவன் யார்? இறைவனுக்கு உருவம்
உள்ளது என்று நினைத்து நாம் அவனுக்கு, நாம் என்னவெல்லாம்
நமக்காக செய்துகொள்கிறோமோ அவையனைத்தையும் அவனுக்கு
செய்கிறோம், ரசிக்கிறோம். மேலும் இறைவனிடம் நீ எனக்கு இது
செய்தால், நான் உனக்கு அது செய்கிறேன் என்று வியாபாரம்
செய்கிறோம். சற்றே சிந்தித்துப் பார்ப்போம். இந்தப் பிரபஞ்சத்தைப்
படைத்து, கோடானுகோடி கோள்களையும், உயிர்களையும்
படைத்து, அவை அனைத்தையும் இயக்கிக்கொண்டும், காத்துக்
கொண்டும் இருப்பவன் இறைவன். அவனுக்கு தேவை என்பது
இல்லை. ஏனெனில் அவனுக்கு உடலும் இல்லை, குடலும் இல்லை. அப்படியெனில் இவ்வளவு நாட்களாக நாம் செய்துகொண்டிருக்கும்
பூஜை, ஆராதனை, திருவிழாக்கள் இவையெல்லாம் எப்படி உருவாகி
இருக்கும்? ஒழுக்க நெறி தவறி வாழும் மக்களை நல்வழிப்படுத்தி
அவர்களை திருத்துவதற்கும், சமுதாயத்திற்கு அவர்களால் ஏற்படும்
துன்பங்களைத் தவிர்ப்பதற்கும் உண்மையான இறையுணர்வு
பெற்றவர்களும்,சிந்தனையாளர்களும் உருவாக்கியதே ஆகும்.
இந்த நன்னோக்கத்தைப் பயன்படுத்தி சில வியாபாரிகளாலும், சில
சுயநலவதிகளாலும் உருவாகாப்பட்டவைகளே இத்தகைய தேர்த்
திருவிழா போன்ற பல. இவைகளால் ஏற்படும் செலவுகளையும்,
இத்தகைய நேரங்களில் ஏற்படும் சண்டை, சச்சரவு போன்றவைகளை
சிந்தித்து தவிர்ப்போம். வாழ்க வளமுடன்.

வேதாத்திரியம் (10): சிறுவர்கட்கே விளையாட்டு:
சீறல், சினத்தல் ஒழித்து உடல் உரமாக்கும்
சிறுவர்க்காம் விளையாட்டு எண்வகையாம், அவை:
ஏறல், குதித்தல், வளைதல், நீந்தல், ஓடல், எறிதல், பளுதூக்கல், தாண்டல் என மொழிவோம்.

விளையாட்டு என்பது குழந்தைகளுக்கு அவசியமான ஒரு பயிற்சி
ஆகும். ஏனெனில், வளரும் குழந்தைகளுக்கு உடலை வலிமைப்
படுத்துவதற்கும், உடல் வளர்ச்சியடைவதற்கும், உறுப்புகள் நன்கு
செயல்படுவதற்கும், உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறுவதற்கும்
ஏற்றதொரு உடற்பயிற்சி விளையாட்டு ஆகும். ஆனால், இன்றைய
குழந்தைகள் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. அவர்களுக்கு
படிப்பதற்கே நேரம் போதவில்லை, இந்த நிலையில் அவர்கள் எங்கே
விளையாடுவது. அப்படியே வாய்ப்பு கிடைத்தாலும் பெற்றோர்கள்
அவர்களை பெரும்பாலும் விளையாடுவதற்கு அனுமதிப்பதில்லை.
நிறைய குழந்தைகள், பெரியோர்களைப்போலவே மன உளைச்சல்,
மன அழுத்தம் போன்ற துன்பங்களுக்கு ஆளாகிறார்கள். அரசும்,
ஆசிரியர்களும், பெற்றோர்களும் இந்த கருத்தை உணர்ந்து, ஓரளவு
ஆவது குழந்தைகளுக்கு விளையாட அனுமதிப்பது, அவர்களுக்கு
நன்மைப்பயக்கும். மேலும், விளையாட்டு என்பது இன்றைய நிலையில் பெரியவர்கள் செயலாக உள்ளது. ஒருகாலத்தில் இந்தநிலை இருந்தது. அப்போது அண்டை நாடுகளுக்கிடையே அடிக்கடி சண்டை ஏற்படும். அல்லது வலிய விலங்குகளிடம் போராடவேண்டும். எனவே அவர்கள் உடலை வலிமைப்படுத்த பல விளையாட்டுக்களில் ஈடுபட்டார்கள். இன்று
அந்தநிலை இல்லை. மேலும் விளையாட்டுப் போட்டிகளினால்
குழு குழுவாகவும், ஊர் ஊராகவும், நாடு நாடாகவும் சண்டையும்,
பகையும்தான் உருவாகிறது. எனவே விளையாட்டு என்பது
சிறுவர்களுக்கு மட்டுமே என்ற நிலை வரவேண்டும். பெரியவர்கள் விளையாடுவது பற்றி ஒரு மேல்நாட்டு அறிஞர் கீழ் கண்டவாறு கருத்து தெரிவித்துள்ளார், "பதினோரு முட்டாள்கள் விளையாடுகிறார்கள், பதினோராயிரம் முட்டாள்கள் பார்க்கிறார்கள்" என்று. சிறுவர்கள் விளையாட வாய்ப்பு அளிப்போம். வாழ்க வளமுடன்.

வேதாத்திரியம் 11: செயல் விளைவு உணர் கல்வி:
கண், காது, மூக்கு வைத்துக் கதைகள் சொல்லிக்
கருத்துக்குக் கடவுள்தனை சிறுமையாக்கிப்
புண்பட்ட நெஞ்சங்கள் மேலும் புண்ணாய்ப்
போகும் வழி தெரியாமல் தவித்து, வாழ்வில்
கண்கலங்கி நிற்போர்க்கும் கடவுள் தன்மை
கர்மத்தின் விளைவாக எழுந்தியங்கும்
உண்மையினை விளக்குவதே இக்காலத்திற்கு
ஒத்த உயிர்த் தொண்டாகும்; உணர்வோம், செய்வோம். (1)

இறையுணர்வும் அறநெறியுமின்றி மனித வாழ்வு
ஏற்றபடி அமையாது என்ற உண்மை கண்டோர்
மறைமுகமாய் முக்காலத்தோர் அறிவிற்கேற்ப
மதித்திடவும் ஒழுகிடவும் கருணையுள்ளம் கொண்டோர்
குறையெனினும் வேறு வழியின்றி இறைநிலைக்குக்
கொடுத்தார்கள் உருவங்கள், பெயர்கள்.
நிறைவாழ்வுக்கு அறம்புரியும் சொர்க்க ஆசை காட்டி
நெறி பிறழ்வோர் அச்சமுற நரகமும் கற்பித்தார். (2)

செயலிலே விளைவாக தெய்வ ஒழுங்கமைப் பிருக்க
பயனென் தவறிழைத்துப் பரமனைப் பின் வேண்டுவதால்.(3)

அன்றும் இன்றும் என்றும் செயலுக்கேற்ற விளைவுகள் வருகின்றன.
இதை அளிப்பவன் இறைவன். இதை மனிதன் அறிவதில்லை.
அல்லது அறிந்தாலும் அலட்சியம் செய்கிறான். தவறான
செயல்களை செய்கிறான். விளைவாக துன்பம் வருகிறது.
வேதனை அடைகிறான். வருத்தப் படுகிறான். கடவுளை குறை
சொல்கிறான். கடவுள் என்பது சத்தியமானது. நீதி தவறாதது.
அது செயலுக்கு ஏற்ற விளைவை மட்டுமே அளிக்கின்றதுஉனக்கு வரும் இன்பம், துன்பம் இரண்டுமே உன்னுடைய செயலைப் பொறுத்தே அமைகிறது. கடவுளைக் குறைகூறுவது அறியாமை.
தீதும் நன்றும் பிறர் தர வாரா - கணியன் பூங்குன்றனார்.
An action which has an equivalent and opposite reaction - Albert Einstein.
மனம் என்னும் கேப்டன் ஞானேந்திரியங்கள் (கண், காது, மூக்கு,
நாக்கு, தோல்) மற்றும் கர்மேந்திரியங்கள் (கைகள், கால்கள், வாய்,
குதம், குய்யம்) எனும் பத்து உறுப்புகளோடு சேர்ந்து செயல்களை
செய்வதற்கு முன் பலமுறை சிந்தித்து நல்லவைகளை மட்டுமே
செயலாற்றினால் இன்பத்தை மட்டுமே பெறலாம். மாறாக செயல்
புரிந்தால் துன்பமே மிஞ்சும். முக்காலத்தில் இதை உணராமல்
தவறான செயல்களை செய்து தாமும் துன்புற்று, பிறருக்கும்
துன்பத்தை அளித்த மக்களை திருத்துவதற்காகவே கோயில்,
கடவுள், சொர்க்கம், நரகம் போன்றவைகளை கற்பித்து, நல்லது
செய்தால் இறைவன் சொர்கத்தை அளிப்பான் என்றும் தீயவற்றை
செய்தால் இறைவன் நரகத்தை அளிப்பான் என்றும் மக்களை ஆசை
வார்த்தைகளைக் கூறியும், அச்சுறுத்தியும் நல்வழிப்படுததினர்
மக்கள் மீது அன்பும் கருணையும் கொண்ட சிந்தனையாளர்கள்.
வாழ்க வளமுடன்.

வேதாத்திரியம் 12: சீர் காந்த நிலை விளக்கம்:
காந்தநிலை உணர்ந்திடில் கடவுள் மனம் அதனிலே
கண்டிடலாம்; அதன் மாயத் திருநடனக் காட்சியாய்
மாந்தருக்குள் ஊறு, ஓசை, மணம், ஒளி, சுவை, மனம்
மற்றும் இன்பம் துன்பம் யாவும் மாயகாந்த விளைவுகள்
சாந்தமான மன நிலையில் சலனமின்றி ஆய்ந்திட
சந்தேகம் சிக்கலின்றி சாட்சி கூறும் உன் உளம்
வேந்தருக்கும் வேதருக்கும் வணிகருக்கும் பொது இது
விரிந்தறிவில் இறையுணர விளக்கினேன் விளங்கியே.

காந்தம் என்ற ஒன்று இல்லாத இடமோ,பொருளோ, சீவனோ
பிரபஞ்சத்தில் இல்லை எனலாம். சுத்தவெளி எனப்படும்
இறைநிலை தன்னைத்தானே விட்டுவிட்டு அழுத்துவதால்
உருவாகும் இறைத்துகள்கள், அதே சுத்தவெளியின் தொடர்
அழுத்தத்தால் தற்சுழற்சி பெற்று, மேலும் அவைகள் இனைந்து
விண்ணாகி, அந்த விண்ணும் தற்சுழற்சியோடு இயங்குகின்றது.
அவ்வாறு விண் சுழலும் போது அதன் சுழற்சிக்கு ஈடு கொடுக்க
முடியாத இறைத்துகள்கள் அவ்விண்ணிலிருந்து வெளியேறுகிறது.
இவைகள் இறைநிலையோடு மோதும்போது தன்னிலை இழந்து
காந்தம் என்ற நிலை அடைகிறது. இக்கந்தமே பஞ்ச பூதங்களில்
அழுத்தம், ஒளி, ஒலி, சுவை, மணம் என்றும் சீவன்களில் இவைகளை
உணரும் மனமாகவும் செயல் புரிகிறது. இக்காந்தமே பிரபஞ்சம்
முழுவதும் ஆற்றலாகவும், அறிவாகவும் இருந்து அனைத்தையும்
வழி நடத்துகின்றது. வாழ்க வளமுடன்.

வேதாத்திரியம் 13: பார் முழுதும் உணவு, நீர் பொதுவாக்கல்:
இன்று உலகில் எழுநூறு கோடிக்கு மேல் மக்கள் தொகை பெருகி
விட்டது. இதில் எத்தனை பேருக்கு போதிய அளவு உணவு, நீர், இருப்பிடம், போன்ற வாழ்க்கைத் தேவைகள் நிறைவு செய்யப் படுகிறது என்பது மிகப் பெரிய கேள்வி. ஆனால் மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் வாழ்க்கை வளங்கள் அனைத்தையும் அனுபவிப்பதற்கு உரிமை உண்டு. காற்றும், சூரிய ஒளியும் எப்படி தடையின்றி எல்லோருக்கும் கிடைக்கின்றதோ அதே போன்று உணவு, உடை, நீர், இருப்பிடம் இவை அனைத்தும் கிடைக்கவேண்டும். இதற்கு ஓர் உலக ஆட்சி என்ற அமைப்பு உருவானால் மட்டும்தான் முடியும். அவ்வாட்சியின் கீழ் எல்லா நாடுகளும் ஒன்றிணைக்கப்படவேண்டும். அவ்வாட்சியில் எல்லா நாட்டு வல்லுணர்களும் பங்கு வகிக்கவேண்டும். அவர்கள் விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான முறையில் அனைத்தும் கிடைக்க வழிவகைகள் செய்யவேண்டும். முதலில் உலகில் ஓடிக் கொண்டிருக்கும் அனைத்து நதிகளையும் இணைத்து, எல்லா பகுதிக்கும் நீர் விநியோகம் செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும். இதன் மூலம் எல்லா நாடுகளும் நீர்வளம் பெறும்போது அங்கு உணவு உற்பத்தி பெருகும், குடிநீர் தட்டுப்பாடு நீங்கும். வாழ்க வளமுடன்.

உலகமென்ற மண்மீது அனைவரும் பிறந்தோம்,
உயிர்காக்கும் காற்று ஒன்றே மூச்சு விடுவதற்கு
உலகெங்கும் ஒளி வீசும் சூரியனும் ஒன்றே
உள்ள கடல் ஒன்றே நீர் ஆவியாகிப் பொழிய
உலகில் இன்று உள்ளோர் இதிலொன்றும் செய்ததில்லை
ஒவ்வொருவரும் பிறந்து வாழ்ந்து செத்துப் போவார்.
உலகில் ஒரு குழுவினர் மற்றவரைக் கொன்று
உயிர் வாழ்தல் நீதியெனில் கொலைஞர்களே மிச்சம்.

வேதாத்திரியம் 14 : பல மதங்கள் பல கடவுள் பழக்கம் ஒழித்து
உண்மை ஒன்றைத் தேர்ந்திடுதல்:
உலக மக்கள் பண்பாடு உருக்குலைந்து போச்சு
ஒவ்வொருவரும் பிறர்க்கு பகைவராகின்றார்கள்
பல மதத்து தலைவர்களும் கூடி ஓர் அரங்கில்
பற்றற்று தெய்வநிலை தேர்ந்தெடுக்க வேண்டும்.

இன்று உலகில் வாழ்கின்ற சீவன்களில் உடல் அமைப்பிலும்,
அறிவின் உயர்விலும், வாழ்க்கை முறையிலும் மிக உயர்ந்த
நிலையில் இருப்பவன் மனிதன். ஆனால் வினைப் பதிவின்
காரணமாக, விலங்கினங்களிலிருந்து வித்துத் தொடராக
வந்ததனால் மனிதப் பண்புகளை அறியாமலும், அறிந்தும்
அலட்சியம் செய்தும், உணர்ச்சி வயப்பட்டு செயல்கள் ஆற்றி
துன்புற்றும், துன்புறுத்தியும் வாழ்கின்ற மக்களை நெறிப்படுத்தி
பிறவியின் நோக்கமாகிய முழுமைப் பேறை அடைவதற்கு
உதவி செய்ய நினைத்த சிந்தனையாளர்கள் ஆங்காங்கே
உருவாக்கிய அமைப்புகளே இன்று மதங்கள் என்று அழைக்கப்
படுகின்றன. காலப்போக்கில் சுயநலம் எழுச்சி பெற்றதனால்
மதங்களுக்குள்ளே சண்டைகளும் சச்சரவுகளும் உருவாகின.
இன்று அறிவில் வளர்ச்சி பெற்ற, உண்மைப் பொருளை உணர்ந்த
மதத் தலைவர்கள் ஒன்றுகூடி கலந்தாய்வு செய்து இறைநிலை
என்பது ஒன்றா? பலவா? என்ற கேள்விக்கு விடை காணவேண்டும்.
இறைநிலை ஒன்று எனில் அது எது என்றறிந்து உலக மக்கள்
அனைவருக்கும் அதை தெரிவித்தல் அவசியமாகும். உலகிலுள்ளோர்
அனைவரும் அந்த ஒரே கடவுளை வணங்குவதோடு, சண்டை
சச்சரவுகளை ஒழித்து ஒத்தும் உதவியும் வாழ்வது இன்றைய
காலகட்டத்தில் சமுதாய மேம்பாட்டிற்கு உதவி புரியும்.
வாழ்க வையகம். வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.
வேதாத்திரிய வாழ்க்கை நெறி 14-ம் நிறைவுற்றது.
www.vethathiri.edu.in
www.facebook.com/groups/vethathiriyam

Labels

Blogspot Readers