Pages

vethathiri maharishi

vethathiri maharishi

குடும்ப அமைதி

உறவுகள் மேம்பட

குடும்பத்திலும், அலுவலகத்திலும், மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்க

1  நானே பெரியவன். நானே சிறந்தவன் என்ற அகந்தையை (EGO) விடவேண்டும்.
2 அர்த்தமில்லாமலும், பின்விளைவு அறியாமலும் பேசிக் கொண்டிருக்கக் கூடாது. (loose talks).
3 எந்த விஷயத்தையும், பிரச்சனையையும், நாசூக்காக கையாள வேண்டும். (Diplomacy), விட்டுக் கொடுக்க வேண்டும். (compromise)
4 சில நேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துத் தான் ஆகவேண்டும். (Tolerance)
5 நாம் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதாடக் கூடாது. (Adamant Arguement)
  குறுகிய மனப்பான்மையை விட்டொழிக்க வேண்டும்.(Narrow Mindedness)
6.உண்மை எது,பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் ,
 அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விட்டு விட வேண்டும்.(Carrying tales)
7. மற்றவர்களை விட நம்மை எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப் படக் கூடாது. (Superiority Complex)
8.அளவுக்கு அதிகமாய் ,தேவைக்கு அதிகமாய் ஆசைப் படக் கூடாது.(Over Expectation)
9.எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும், அவர்களின் சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக் கொண்டு இருக்கக் கூடாது.
10 கேள்விப் படுகின்ற எல்லா விஷயங்களையும் நம்பி விடக் கூடாது.
11  அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்தக் கூடாது.
12  நம் கருத்துகளில் உடும்பு பிடியாக இல்லாமல், மற்றவர் கருத்துக்கும் மதிபளிக்க வேண்டும்.
13  மற்றவர்களுக்கு மரியாதை காட்டவும், இதமான அன்புச் சொற்களை பேசவும்,அடக்கமும் பண்புடனும் நடந்து கொள்ள வேண்டும்.
14  பிரச்சினைகள் வரும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல்,நாமே மனம் திறந்து பேசவேண்டும்.
வாழ்க வளமுடன் வேதாத்திரி மகரிஷி www.vethathiri.edu.in

குடும்ப அமைதி


பொது:
1. குடும்ப உறுப்பினர்களிடம் உடல்நலம் மனவளம் உறுதியான நட்பு இவை நிலவினால் அமைதி நீடிக்கும்.
2. ஒவ்வொருவரும் தத்ம் கடமையை உணர்ந்து ஆற்றியும், வரவுக்குள் செலவை நிலைநிறுத்தியும் செல்வ வளத்தை
காக்கலாம்.
3. தேவை அளவு, தன்மை, காலம் ஆகியவற்றில் கருத்து முரண் ஏற்பட்டால் வெளிப்படையாகவேப் பேசி அன்போடு தீர்த்துக்
கொள்ளலாம்.
4. பிறர் குற்றத்தைப் பெரிது படுத்தாமையும் பொறுத்தலும் மறத்தலும் அமைதிக்கு வழிகளாகும்.
5. பிறர் கூறும் கடுஞ்சொற்களையும் அவை சொல்லப்படாததுபோல் பாவித்து ஒதுக்கிவிட்டால் அமைதி பிழைக்கும்.
தம்பதிகளுக்கு:
6. எவ்வகையிலும் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் தெரியாமல் வாழ்தல் நல்லதல்ல.
7. ஒருவரை ஒருவர் துல்லியமாக புரிந்துகொண்டால் எக்காரணத்தாலும் அன்புப் பிடிப்பு தளராது.
8. ஒருவருக்குத் தெரியாமல் மற்றவர் சம்பாதிப்பது செலவழிப்பது சேமிப்பது பிணக்கையே கொண்டு வரும்.
9. குடும்பத் தலைவருக்கு தன்முனைப்பு சிறிதும் வேண்டாம்.
10. நிர்வாகத்திற்கு ஏற்றது அறிவுதான் (உணர்ச்சியல்ல).
11. கூட்டாளியின் சக்திக் குறைவை சகித்துக்கொண்டால் சிக்கல் எழாது.
12. வாழ்க்கைத்துணை ஒத்துக்கொள்ளும் நாள்வரை எவ்வளவு அவசியமானாலும் எதையும் தள்ளி வைத்தலே நல்லது.
13. ஒருவர் மற்றவரின் மனப்போக்கு, உடல் தேவைகளை மதித்தால் பாலுறவு வேட்பில் நிறைவு பெறலாம்.


உணர்வாளர்களுக்கு:
14. தனக்குத் கிடைத்த வாழ்க்கைத் துணை பற்றி தம்பதிகளில் யாருக்கும் குறையிருக்கத் தேவையில்லை (காரணம் நம்
உயிராற்றலே தான் தேர்ந்தெடுத்தது).
15. சிறிய சிறிய சச்சரவுகளுக்கெல்லாம் இடம் கொடுத்தால் பிறவிக்கடல் நீந்தும் நமது நோக்கத்திற்குத் தேவையான சக்தி
விரயமாகிவிடும்.


குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்


மனித வாழ்க்கை அறிவின் வளர்ச்சிக்குத் தக்கவாறு நான்கு விதமாக பிரித்து வகுக்கப்பட்டுள்ளது- பிரம்மச்சர்யம், கிரகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என்பதாக.


வாழ்க்கையில் எல்லாச் செயல்களும் இயற்கையும், அறிவும் இணைந்ததாகவே இருக்க வேண்டும். இயற்கைக்கு ஏற்ற முறையில் நான் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று யோசித்து திட்டமிட்டால் தான் இல்லறம் சிறக்கும். ஒழுக்க பழக்கங்கள், தொழிலறிவு, இயற்கை பற்றிய தெளிவு, இவையனைத்தும் குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் இருப்பது நல்லது. தனி மனிதன் தன் கடமைகளை உலகுக்குச் செய்ய இல்லறம் என்ற நல்லறம் மூலம் தான் முடியும். ஒருவர்க்கொருவர் மனமொத்து உதவும் ஒரு நட்பு வாழ்க்கைக்குத் தேவை. இருவரின் மனம் ஒத்த, மதிப்புணர்ந்த வாழ்க்கை வாழ இறை வழிபாடு, அறநெறி இரண்டும் வேண்டும்.


திருமணம் செய்து குடும்பம் ஏற்கும் போது உச்சியில் முடி வளர்த்து குடுமி வைப்பார்கள். அது உண்மையில் 'குடும்பி' என்பதன் அடையாளமே. குடும்ப வாழ்வின் நிறைவு பெற்ற பின் குடும்பி யோசிக்க வேண்டும். நான் வந்த நோக்கம் என்ன? இல்லறம் முடிந்து அறிவறிந்து இறைவனை அடைய வேண்டும். ஆன்மாவை அரிய யோகம் பயில வேண்டும். இதன் காலம் வானப்பிரஸ்தம்.


இறைவன் தான் எல்லாமாக உள்ளான். எனக்குத் தெரிந்த அறிவு, உழைப்பை சமூகத்துக்கு நான் கொடுக்க வேண்டும் என்று இல்லறத்தில் இருப்பவர் நினைப்பது அவர் தம் சமூகக் கடமை. அந்தக் காலத்தில் மக்களுக்கு சேவை செய்யவே மகான்கள் துறவு மேற்கொண்டார்கள்.


ஒருவருக்கொருவர் மனமொத்து உதவி செய்யக்கூடிய நட்பு இல்லறத்தில் தான் அமைய முடியும். வாழ்க்கை சிறக்கும். உடல், உயிர், மனத்தேவைகள் நிறைவு பெற பொருத்தமான வாழ்க்கைத் துணை அமைய, ஒருவரை ஒருவர் மதித்து, நட்பு அன்போடு வாழ இறை வழிபாடு, குடும்பத்தினரிடம் அன்பு, கருணை, நட்பு நலம், மன்னிப்பின் மேன்மை, நன்றி முதலிய பண்புகளை அறிந்து நடக்க வேண்டும்


இறைவனுக்குள்ளாக நாமிருக்கிறோம். நமக்குள் இறைவன் நிறைந்துள்ளான். கோடிக்கணக்கான கோள்கள் சூரியன்கள் சுத்த வெளியில் மிதந்து உருண்ட வண்ணம் உள்ளன. இவ்வளவையும் தாங்கி நடத்துவது இறைவெளியே தான். நம்முள் ஆறாவது அறிவாக இருந்து நம்மை இயக்கி வழி நடத்துவது கடவுள். 'கட+உள்' என்றால் நமக்குள் கவனித்து பார்ப்பது. இதை உணர்ந்தால் நம் உடலே ஓர் ஆலயம் தான். ஆன்மாவே இறைவன், 'நாம் செய்வதையெல்லாம் இருப்பில் வைத்து பலனை அளிப்பது ஆத்மா'.


கணவன், மனைவி இருவரும் ஒருவர் வினையை இன்னொருவர் கூட இருந்து தூய்மை செய்து வாழ்வதே இல்லறம். இருவரிடையே பிணக்கு வரக் கூடாது. மன அலையை குறைத்து தியானம் பழக அமைதி அலை நிலைத்து விடும். சிந்தனை சிறக்கும். வெறுப்பு உண்டாகாது. அன்பும், கருணையும் தழைக்கும். காதல் பிரகாசிக்கும். சிறு தவறுகளை மன்னிக்கும் தன்மை மேம்படும். ஒருவருக்கொருவர் என்ன தேவையோ செய்யும் மனம் உண்டாகும். இதற்கு வேண்டிய அனைத்து பயிற்சிகளும் மனவளக்கலையில் தருகிறோம். உடலில் உள்ள உயிராற்றல் உடலுக்கு அப்பால் விரிந்து வீணாகாமல் வாழ்க்கைக்கு ஆதாரமாகும்.


சினம், கவலை, ஏமாற்றம் வெறுப்பு முதலியன வாழ்க்கைத் துணையை துன்பம் கொள்ளச் செய்வதை உணர்ந்து நாம் திருந்த வேண்டும். அன்பும், புரிந்து கொண்ட தன்மையும் மாறக் கூடாத. அறிவு விழிப்பு நிலையில் இருந்தால் உணர்ச்சி வசப்படுவதை தடுக்கலாம். மனதில் நம் தவறுகளை உணர்ந்து அகத்தாய்வு செய்து பெற்றோரிடமும், உற்றாரிடமும் மன்னிப்பும், திருந்தியும் வாழலாமே?


விட்டுக் கொடுத்தல், தியாகம், பொறுமை, இவை நம் பட்டப் படிப்புகள் ஆகி விடும். வினைகள் தீரும் ஒரு ஆராய்ச்சி சாலை ஆகி விடும். உங்கள் அண்மையில் உள்ளோர், குடும்பத்தினர் யாவரும் இதையே பின்பற்றுவார்கள். இதை விட பெரிய சமூக சேவை வேறு எதுவும் இல்லை.


குடும்ப மகிழ்ச்சி


கணவன் மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள்.


கணவன் மண வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் மகிழ்வாய் குடும்பம் நடத்த ஆசைதான். அது சிலருக்கு எளிதாகவும் அனேகருக்கு சிரமமாகவும் இருக்கிறது.


குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை?
கணவன் மனைவி எதிர்பார்ப்புகள் என்னென்ன?
குழந்தைகளை தன்னம்பிக்கையுடன் வளர்ப்பது எப்படி?
குடும்ப மகிழ்ச்சியில் உறுப்பினர்களின் பங்கு என்ன?
வரவு, செலவை வரையறுப்பது எப்படி?
குடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை?
1. வருமானம்
2. ஒத்துழைப்பு
3. மனித நேயம்
4. பொழுதுபோக்கு
5. ரசனை
6. ஆரோக்கியம்
7. மனப்பக்குவம்
8. சேமிப்பு
9. கூட்டு முயற்சி
10.குழந்தைகள்
கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?
1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
2. மனது புண்படும்படி பேசக் கூடாது.
3. கோபப்படக்கூடாது.
4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது
5. பலர் முன் திட்டக்கூடாது.
6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்
10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.
12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
17. ஒளிவு மறைவு கூடாது.
18. மனைவியை நம்ப வேண்டும்.
19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.
22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது உன் குழந்தை ‘ என்று ஒதுங்கக் கூடாது.
27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.
31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.
37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.
மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?
1. பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல்.
2. காலையில் முன் எழுந்திருத்தல்.
3. எப்போதும் சிரித்த முகம்.
4. நேரம் பாராது உபசரித்தல்.
5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.
6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.
7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.
8. அதிகாரம் பணணக் கூடாது.
9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.
10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.
11. கணவனை சந்தேகப்படக் கூடாது.
12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.
13. பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.
14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.
15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.
16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.
17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது.
18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
19. கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.
20. கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.
21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
22. எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.
23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.
24. தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.
25. அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.
26. குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.
27. சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.
28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.
29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
30. உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.
31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.
32. உடம்பை சிலிம் ஆக வைத்துக் கொள்ள வேண்டும்.


பிள்ளைகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்பது எப்படி?
தன்னம்பிக்கை என்பது மனித வாழ்க்கைக்கு ஒரு நெம்புகோல் போன்றது. அது இல்லையேல் வாழ்க்கை இல்லை. இதனைப் பெற்றோர் தம் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும்.
சுயமாகச் சிந்திக்க, சுயமாகச் செயல்பட குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். படிப்பில் , அதோடு கூட வீட்டு வேலைகளில் குழந்தைகளுக்குப் பெற்றோர் போதிய பயிற்சி அளிக்க வேண்டும்.
குழந்தைகளை அச்சுறுத்தி அடித்துக் கண்டிக்கக் கூடாது.
ஆனாலும் அதன் போக்கில் எதேச்சையாக விட்டுவிடக் கூடாது. குழந்தைகளுக்கு அனபுப்பால் ஊட்டி, அரவணைத்துப் பெருமைப் படுத்த வேண்டும் .’நீ ராசா அல்லவா? ராசாத்தி அல்லவா?’ என்கிற வாசகங்கள் பெற்றோர் வாயிலிருந்து வர வேண்டும். ‘மக்கு, மண்டு, மண்டூகம் – போன்ற வாசகங்கள் மலையேற வேண்டும். பயம், கூச்சமின்றி, உறுதியான நெஞ்சம், உண்மையான பேச்சு, உயர்வான பண்பு இவை குழந்தைகளுக்கு அமைய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?
பொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால்தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக டிக் செய்து கண்டு பிடியுங்கள். பின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள்.
1. அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள்.
2. ஒருவறையொருவர் குறை கூறும் பழக்கம்.
3. அவரவர் வாக்கைக் காப்பாற்றத் தவறுதல்.
4. விரும்பியதைப் பெற இயலாமை.
5. ஒருவரையொருவர் நம்பாமை.
6. ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதில்லை.
7. உலலாசப் பயணம் போக இயாலாமை.
8. ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை.
9. விருந்தினர் குறைவு.
10. பொருள்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல்.
11. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இலலை.
12. விட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு.
13. ஒருவர் மனம் புண்படும்படியாகப் பேசுதல்.
14. மகிழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு.
உங்கள் பங்கு என்ன?
உங்கள் குடும்பம் மகிழ்வாக இருக்க அல்லது அதில் மகிழ்ச்சியைக் குறைக்க, தான் எந்த அளவு காரணம் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து இல்லாததைக் கொண்டு வர வேண்டும்.
1. அன்பாகப் பேசுவது
2. பிறர் மீது அக்கறை காட்டுவது.
3. வீட்டை அழகாக வைத்துக் கொள்வது.
4. குறை கூறாமல் இருப்பது.
5. சொன்னதைச் செய்து கொடுப்பது.
6. இன்முகத்துடன் இருப்பது.
7. முன் மாதிரியாக நடந்து கொள்வது.
8. பிறரை நம்புவது.
9 .ஒன்றாக பயணம் போக விரும்புவது.
10. பணிவு
11. எதையும் எடுத்த, உரிய இடத்தில் வைப்பது.
12. பிறர் வேலைகளில் உதவுவது.
13. பிறருக்கு விட்டுக் கொடுப்பது.
14. பிறர் வருந்தும் போது ஆறுதல் கூறுவது.
15. சுறுசுறுப்பு
16. சிறிய விசயங்களைக் கூடப் பாராட்டுவது.
17. புதிய முயற்சிகளை ஊக்குவிப்பது.
18. நகைச்சுவையாகப் பேசுவது.
19. அதிகமாக வேலை செய்ய விரும்புவது.
20. செலவுகளைக் குறைக்க ஆலோசனை கூறுவது.
21. நேரம் தவறாமை.
22. தற்பெருமை பேசாமல் இருப்பது.
23. தெளிவாகப் பேசுவது.
24. நேர்மையாய் இருப்பது.
25. பிறர் மனதைப் புண்படுத்தாமல் இருப்பது.
எதற்கும் யார் பொறுப்பு?
நமது அனைத்து நன்மை தீமைகளுக்கும் நாமே பொறுப்பு. அன்றாடம் அனேகம் பேரைச் சந்திக்கிறோம் உதவி கேட்கின்றோம். ஆணையிடுகிறோம்.
அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெற்றி பெறுகிறோமா? பல நேரங்களில் பகையும், பிரச்சனைகளுமே மிஞ்சுகின்றன. விளைவாக: விரக்தியும், இரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி, தீராத கவலை, அமைதியின்மை, மது, சிகரெட் பழக்கம், தூக்க மின்மை, ஒத்துப்போக இயலாமை, உணர்ச்சி வசப்படுதல் அஜீரணம்
ஏன் இந்த நிலை?
நாம் மகிழ்வாக இருக்க, நம்மால் பிறரும் மகிழச்சி பெற, பிறர் நம்மை விரும்ப, பிறர் மத்தியில் நம் மதிப்பு உயர, பிறரிடம் நம் காரியங்களைச் சாதித்துக் கொள்ள பத்து கட்டளைகள்
பத்து கட்டளைகள்
1. அன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள்.
2. ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்.
3. இன்சொல் கூறி நான், எனது போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.
4. உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள்.
5. ஊக்கத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள்.
6. எப்போதும் பேசுவதைக் கேட்டு, பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப் பேசுங்கள்.
7. ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துடன், பிறர் குறைகளை அலட்சியப் படுத்துங்கள்.
8. ஐங்குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்.
9. ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள்
10.ஓஹோ, இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள்.
நன்றி: ஈகரை தமிழ் களஞ்சியம்
source: saintvethathiri.blogspot.com
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன் வேதாத்திரி மகரிஷி www.vethathiri.edu.in

JEEVA Vazhga Valamudan

Labels

Blogspot Readers